|
பெரியாராக நடித்தவரும் பெரியாரின் வாரிசாக நடிப்பவரும்


சேலத்தில் நடந்த பெரியார் திரைப்பட விழாவில் ‘தமிழர் தலைவர்’ வீரமணி பங்கேற்றபோது பல ‘தன்மானச் சிங்கங்கள்’ அவரது காலில் விழுந்து ‘ஆசிர்வாதம்’
பெற்றனர். அருகே நின்ற அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்கூட தனது காலில் விழ
வந்தவர்களைக் கடுமையாகக் கண்டித் தார். ஆனால் ‘தமிழர் தலைவர்’ மகிழ்ச்சியோடு
‘காலில் விழுந்தவர்களை’ப் பார்த்து மகிழ்ந்தார். இது பற்றி
‘தோழர் பெரியார்’
இணையதளம் படத்துடன்
வெளியிட்ட கட்டுரை இது.
தலைவர் மேடையை நோக்கி வரும்போது தமிழர் தலைவர் வாழ்க! என முழங்க பயிற்சி
பெற்ற ஒரு கூட்டம்.
உலகில் எவராலும் தமிழர் தலைவரின் வாகனத் தின் கதவைத் திறக்க முடியாது
என்பதால் அதற் கென தனியே ஒரு உதவிப் பொதுச் செயலாளர்!
அண்ணன் அழகிரியின் மதுரை விசுவாசி களை மிஞ்சும் வகையில் சுவரொட்டி வாசகங்கள்...
சுவரொட்டிகளில் மட்டுமல்லாமல் நிகழ்ச்சி
துண்டறிக்கைகளிலும் தமிழர் தலைவரின் நடைப்பயிற்சிப் புகைப்படங்கள்!
பெரியார் பிறந்த நாளில் வெறும் கொடி யேற்றங்கள் தான்!
தமிழர் தலைவரின் பிறந்த நாளில் பட்டி மன்றம், கருத்தரங்கம், பாட்டரங்கம்
தமிழ் நாடெங்கும் விழாக்கோலம்!
தலைவருக்கு ஆளுயர ‘கட்அவுட்’கள்; அதற்கு சர விளக்குகள்; இப்படித் துதி
பாடுபவர்களுக்கு செயல்வீரர் பட்டங்கள்!
நிகழ்ச்சித் துண்டறிக்கைகளில் தமிழர் தலைவர் என்பதற்குப் பதிலாக கழகப்
பொதுச் செயலாளர் என அச்சிட்டு அவரைக் ‘கேவல’ப் படுத்திவிட்டால் -
பொதுச்செயலாளர் அவர்களே! என விளித்துப் பேசிவிட்டால் அவர்களை துரோகிகள் என
முத்திரை குத்துவது!
தலைவருக்கு மாற்றுக் கருத்தை அதற்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கூறுவதே
குற்றம். அதையும் ஒரு பெண் கூறிவிட்டால் அவருக்கு ‘குச்சிக்காரி’ பட்டம்!
ஒரு மிகப் பெரிய பண்பாட்டுப் புரட்சி இயக்கத்தின் தற்போதைய தலைவரின்
வரலாற்றில் சில துளிகள்தான் இவை.
இந்த வரிசையில் இந்தப் படங்களும்...
தமிழர் தலைவர் காலிலும் விழுவோம்!
பெரியார் பணி.......
' முடி' ப்போம்!
நன்றி : http://thozharperiyar.blogspot.com |