தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக வியாபாரமாகியுள்ளது சிவாஜி. 600 பிரதிகள் வரை போடப்பட்டு தமிழகத்தின் பெரும்பாபலான மாவட்டத்தலைநகரங்களில் ஒரே நேரத்தில் 3 அல்லது 4 அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் வெளியான நாளன்று ஈழத்தமிழர்கள் அதிகம் பார்வையிடும் www.lankasri.com போன்ற இணையதளங்களில் ரஜினியை அம்பலப்படுத்தி சிவாஜி படத்தைப் புறக்கணிப்பீர்! என அறிவிப்புகள் வெளியிட்டிருந்தும் கூட ஐரோப்பிய நாடுகளிலும் சிவாஜி பெருவெற்றி பெற்றுள்ளது. முதல் ஒருவாரம் தமிழகத் திரையரங்குகளில் உண்மையாகவே திருவிழாக்கோலம்தான்.
சிவாஜி படத்தின் முன் டிக்கெட் பதிவின் (ரிசர்வேஷன்) ஒரே நாள் கலெக்ஷன் ஒரு கோடியே எண்பது லட்சம்!!!! இது சென்னை நகரத்திற்கு மட்டும்! பிற ஊர்களை பற்றிய விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதனும், ஜி.வி.பிலிம்சும் இணைந்து வாங்கியிருக்கிறார்கள். சுமார் ஆறரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட சிவாஜி, 50 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடினால் போட்ட முழு பணத்தையும் எடுத்துவிடலாமாம்! இந்த நிலையில் ரிசர்வேஷன் கவுண்டரை காலை 6 மணிக்கு திறந்து மாலை 6 மணிக்கு முடிப்பதற்குள் ஒரு கோடியே எண்பது லட்சத்தை வசூல் செய்திருக்கிறது.
இத்தனைக்கும் சென்னை நகர எல்லை என்பது (சினிமா விநியோக எல்லை) சிறிய பகுதிதான். இதில் 17 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது.
வழக்கம்போல சங்கர் கதைதான். ஒரு தனி நபர் தன் சாகசத்தால் இந்த நாட்டையே தலைகீழாகப் புரட்டிப்போடுவது. ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் வரிசையில் நடிகர்களைக் கொஞ்சம் மாற்றிப்போட்டு, அதே சுஜாதாவை வைத்து வசனங்களையும் கொஞ்சம் மாற்றியுள்ளார். இவரது இலஞ்ச ஒழிப்புத் துறையை ரமணா வெற்றி மூலம் விஜயகாந்த் அவர்கள் கைப்பற்றிக் கொண்டதால் வேறு வழியின்றி கருப்புப்பண ஒழிப்பு என்ற புது ரூட்டைப் பிடித்திருக்கிறார் சங்கர். கருப்புப்பண ஒழிப்பை வேறு யாரேனும் கைப்பற்றும் வரை இனி கமலஹாசன், விக்ரம், விஜய் இப்படிப் பலரும் சங்கரால் கருப்புப்பணம் ஒழிக்கப் பாடுபடப்போகிறார்கள். நாமும் பார்த்துத் தொலைக்கத்தான் போகிறோம்.
இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், நிச்சயமாக இது ரஜினி படமாக வரவில்லை. முழுக்க முழுக்க சங்கர் - சுஜாதாவின் படமாகத்தான் வந்துள்ளது.
சங்கர் - சுஜாதா கும்பல் இப்படத்தின் மூலம் விதைத்துள்ள நச்சுக்கள் நான்கு.
1. திருமணம் செய்ய ஜாதகம் மிக முக்கியமானது. ஜாதகத்தில் நம்பிக்கை வைக்காவிட்டால் அழிந்துபோவீர்கள்.
2. திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்றால் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். எனவே அங்கு சென்று விளக்குப் போடுங்கள். ( சிவாஜி படம் வெளியான பின்பு திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதாம். 2 ரூபாய்க்கு விற்ற விளக்குகள் 40 ரூபாய் வரை விற்பனை ஆகிறதாம். 25.06.07 தினமலரில் செய்தி வந்துள்ளது.)
3. கருப்புப்பணம் மாற்றும் ஹவாலா தொழிலிலும் இஸ்லாமியர்கள் தான்
இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் எப்போதும் சட்டத்திற்குப் புறம்பானவர்கள்.
4.கருப்பு என்ற நிறம் அழகற்றது. இழிவானது.
படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியது பற்றி 24.06.07 ஜீனியர்விகடன் இதழில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டை முகமது ரபீக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜாதகம்தான் சிவாஜியில் கதாநாயகனாக உள்ளது. எனவே அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.
ஜாதகம் , சோதிடம் ஆகியவை பற்றி விரிவாக சோதிடப்புரட்டு என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் மிக முக்கிய எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் எழுதியுள்ள இந்நூலை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அந்நூலிலிருந்து சிவாஜி படம் பார்த்த ஈழ, இந்திய தமிழர்களுக்காக சில பக்கங்கள் ….
சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் எண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.
சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்..
1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன.
2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.
3) இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.
4) சோதிடம் ஞாயிறு குடும்பத்தின் மையம் புவி என்று சொல்வது பெரிய மடமை. அதன் மையம் ஞாயிறு என்பது இன்று அறிவியல் பால பாடம்.
5) சோதிடம் ஞாயிறு போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது.
6) இராசி மண்டலத்தை 12 ஆகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் 30 பாகை கொண்ட வீட்டுக்குள் அடைப்பது செயற்கை ஆனது. அப்படிப் பிரிக்கப்படுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. அது முற்றிலும் விதிக்கட்டின்றி (Arbitrary) மனம் போன போக்கில் வகுக்கப் பட்டதாகும். கோள்கள் வௌ;வேறு இராசியில் வௌ;வேறு காலத்தைச் செலவிடுகின்றன. பாம்பாட்டி என்ற இராசியை சோதிடம் முற்றாகக் கணக்கில் எடுப்பதில்லை.
7) இராசி உருவங்கள் (மேடம், இடபம்...) வெறும் கண்காட்சியை அடிப்படையாகக் கொண்டவை. வௌ;வேறு தொலைவில் கூட்டமாக இருக்கும் நட்சத்திரங்கள் பண்டைய மனிதனுக்கு ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்ற தோற்ற மயக்கத்தைக் கொடுத்தன. அந்தத் தோற்றத்தை வைத்து அந்த இராசிகளுக்கு உண்மையான ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்றவற்றின் குணாம்சங்களை மாடேற்றினர்! அறிவியல் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் அறிவிலிகளான சோதிடர்கள் தங்கள் மூடத்தனத்தைக் கைவிடாது தொடர்ந்து சோதிடத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்து வருகின்றனர்.
8) சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால் குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா? பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகிற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது.
9) புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் (றழடிடிடந) ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுவட்டக்கோட்டைக் கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று ஏறத்தாழ 24 பாகையை (24 நாள்களை) எட்டி இருக்கிறது.
(10) ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடி கல் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?
(11) புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே அலஸ்க்கா, நோர்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.
(12) மனிதன் பிறந்த புவி;க் கோளையும் அதன் தாக்கத்தையும் சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாத்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே அதற்கான ஏது ஆகும்.
கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை ஈர்ப்பு விசையின் பெறுமதியை (செவ்வாய்க் கோளோடு ஒப்பிடும் பொழுது) காட்டுகிறது. செவ்வாய்க் கோள் விதிக் கட்டின்றித் தெரிவு செய்யப்பட்டது. செவ்வாயோடு ஒப்பிடுவது சோதிடம்; அந்தக் கோளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே! .
ஈர்ப்பு விசை ஈர்ப்பு விசையின் பெறுமதி
தாய் 20
மருத்துவர் 06
மருத்துவமனை 500
ஞாயிறு 854,000
நிலா 4,600
புதன் .38
வெள்ளி 27
செவ்வாய் 1
வியாழன் 46
யுறேனஸ் 0..1
நெப்தியூன் 0.03
புளுட்டோ 0.059
வால்மீன் 0.00001
ஈர்ப்பு விசை கோள்கள் புவிக்கு அருகில் வரும் பொழுது கணிக்கப்பட்டதாக கொள்ளப்பட்டது. மேலதிகமாக கொள்ளப்பட்ட அனுமானங்கள் (யுளளரஅpவழைளெ)-
குழந்தையின் எடை - 3 கிலோ
தாயின் எடை - 50 கிலோ
மருத்துவர் எடை - 75 கிலோ
மருத்துவமனைக் கட்டடத்தின் எடை- 2.1 தர 1012
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.1 மீ
மருத்துவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.3 மீ
மருத்துவமனையின் மைய எடைக்கும் குழந்தைக்கும்
இடையில் உள்ள தூரம் - 6.1 மீ
மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் குழந்தை பிறக்கும் பொழுது தாய், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக் கட்டடம் மூலமாக இடம் பெறும் ஈர்ப்பு விசையின் தாக்கம் (force of gravity) சோதிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செவ்வாய்க் கோளை விட முறையே 20, 6 மற்றும் 500 மடங்கு கூடுதலாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். எனவே ஒரு சோதிடர் ஒரு குழந்தையின் சாதகத்தை ஈர்ப்பு விசை அடிப்படையில் தயாரித்தால் கோள்களை மட்டுமல்ல விண்வெளியிலும் மண்ணிலும் காணப்படும் ஏனைய பருப்பொருள்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (electro-magnetic energy) என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருள்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும் பொழுது பின்வருமாறு காணப்படும்.
பருப்பொருள் மின்காந்த ஆற்றல்
ஞாயிறு 3 தர 109
200 வட்ஸ் மின்குமிழ் 9 தர 106
(2 மீ தொலைவில்)
முழு நிலா 7,600
புதன் 0.4
வெள்ளி 4.4
செவ்வாய் 1
வியாழன் 0.8
சனி 0.1
யுறேனஸ் .0004
நெப்தியூன் .00005
புளுட்டோ 8 தர 10 - 3
மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 200 வாட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிட பல ஆயிரம் மடங்கு வலுவானது!
குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் சொல்கிறது! அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.
சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.
வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல் பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும் இராசிகள் பற்றியும் இராசி வீடுகள் பற்றியும் எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது. அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்ச கட்ட புரட்டு ஆகும்.
ஒரு குழந்தையின் நிறம், குணம், உடல் நலம், புத்திக் கூர்மை, ஆயுள் பலம் போன்ற குணாம்சங்கள் அந்தக் குழந்தையின் தாய் தந்தை இருவரது மரபுக் குறியே (பநநெவiஉ உழனந) தீர்மானிக்கின்றது. இதுவே இன்றைய அறிவியலின் முடிந்த முடிபாகும்.
இனி பிரபல சோதிடர்கள் சொன்ன எதிர்வுகூறல்கள் எப்படிப் பிழைத்துப் போனது என்பது பற்றிப் பார்ப்போம்.
ஜோதிட மாமணி, பெயரியல் நிபுணர், வாஸ்து சக்ரவர்த்தி என்ற அடைமொழிகளோடு; உலா வருகின்றவர்கள் உண்மையிலேயே மக்களின் எதிர் காலத்தை கணிக்கக் கூடியவர்களா? இல்லை, மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டு அதில் காசு பறிக்கும் மோசடிப் பேர்வழிகளா? என்பதைப் புலனாய்வு செய்ய ராஜமுத்திரை என்ற ஏட்டின் குழு அதிரடியாகக் களத்தில் இறங்கியது. நடந்ததை அவர்கள் மொழி நடையிலேயே தருகிறேன்.
முதலில் நாம் கண்(ணி) வைத்தது அகில இந்திய ஜோதிடர் சங்கத் தலைவர் ஓம் உலகநாதன் எம்.ஏ., எம்.பில்., அவர்களை.
நம் அலுவலகத்திலிருந்து போன் செய்தோம். லைனுக்கு வந்த ஓம் உலகநாதன் “என்ன விஷயம்” என்றார் “சார் உங்கள் அப்பாய்ன்மெண்ட் வேண்டும்” என்றோம் “நான் மும்பையில் பிரதமர் புரோக்ராமில் பிஸியாக இருக்கிறேன்” என்றார்.
விடவில்லை நாம் “நாங்கள் தமிழர் பண்பாட்டுக் கழகத்திலிருந்து பேசுகிறோம். வருடா வருடம் தமிழ்நாட்டில் சிறந்த பிரமுகர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறோம். சிறந்த நடிகராக விஜய்யையும், சிறந்த நடிகையாக அசினையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஜோதிடத் துறையில் யாருக்கு விருது கொடுக்கலாம் என்று பலரையும் கன்சல்ட் செய்தோம். எல்லோரும் சொன்ன ஒரே பெயர் உங்கள் பெயர்தான். உங்களுக்கு ஜோதிடச் சக்ரவர்த்தி என்று விருது வழங்கப் போகிறோம்” என்றவுடன் எதிர் முனையில் அரை நிமிடம் மௌனம்.
பிறகு, “பரவாயில்லை! உங்களுக்காக ஒரு நாள் ப்ரீ செய்து கொண்டு ப்ளைட்டில் வந்து விடுகிறேன். நாளை காலை 11 மணிக்குப் போன் செய்கிறேன். ஒரு நாள்தான் இருப்பேன். மறுபடி பிரதமருடன் புரோக்ராம் இருக்கிறது” என்றார் விடாப்பிடியாக.
மறுநாள் காலை சொன்னபடி அவரே போன் செய்தார.; தமிழர் பண்பாட்டுக் கழகத் தலைவராய் அவதாரமெடுத்தார் நமது ஆசிரியர். அவருக்குப் பக்கபலமாகக் கழக உறுப்பினர்கள் என்ற பெயரில் புறப்பட்டது நமது நிருபர்கள் குழு, கையில் டேப்ரிக்காடர், கேமிராக்களோடு வடபழனி நூறடி சாலையிலுள்ள உலகநாதன் அலுவலகத்தை அடைந்தோம். நம்மை வரவேற்பறையில் அமர வைத்தார் உதவியாளர்.
“இங்கே வராத வி.அய்.பிகளே கிடையாது” என்று பெருமையோடு சிரித்த உதவியாளர் “என்ன விஷயம்?” என்றார் மெல்ல, “எங்கள் கழகத்தின் சார்பாக திருப்பாச்சி படத்திற்காக விஜய்யையும், கஜினி படத்திற்காக அசினையும் தேர்ந்தெடுத்து விட்டோம். இன்னும் பல சினிமாப் பிரமுகர்களையும் சினிமா அடிப்படையில் தேர்ந்தெடுத்து விட்டோம். அய்யா ஜோதிடத் துறையில் ஒரு மேதை. இது எங்களுக்குத் தெரிந்தால் மட்டும் போதாது. இந்த உலகத்திற்கே தெரிய வேண்டும் என்றுதான் ஒரு பிரபலத்தின் ஜாதகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நமது நிருபர் ஒருவர், வேண்டுமென்றே “சினிமா டைரக்.. “ என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டார். கற்ப+ர புத்தி உதவியாளர் சிக் கென்று பிடித்துக் கொண்டார்.
“ஒரு நிமிடம் என்று உள்ளே போன உதவியாளர் அரைமணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார.; உலகநாதனோடு….ஆன்மீக மணம் கமழ, ஞானப்பழமாய் வந்தார் உலகநாதன்.
“வாங்க வாங்க” என்று வரவேற்றவர் ஜாதகத்தை வாங்கியவுடனே சமீபத்தில் பெய்த பெருமழையைப் போல், பலன்களை பொங்கு தமிழில் கொட்டத் தொடங்கினார்.
“இது நிச்சயமாக ஒரு கலையுலகப் பிரமுகரின் ஜாதகம்தான்” என்றவர், பெருமையாக நம்மை ஒரு பார்வை பார்த்தார் நாமும் விடாமல், “எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?” என்றோம்.
தெனாவட்டாகச் சிரித்த படியே அவிழ்த்துவிட்டார் பலன்களை. “33 வயதிற்குமேல் இவர்தான் கலையுலகின் தலைவர். அரச பரம்பரையில் தான் இப்படி ஒரு ஜாதகம் அமையும். செல்வத்தை நீ வேண்டாம், வேண்டாம் என்றாலும் தேடி வந்து உன் காலைச் சுற்றிக் கொள்ளும். நிச்சயமாக இந்த ஜாதகத்திலுள்ளவருக்குச் சதாபிஷேகம் சிறப்பாக நடை பெறும்” என்று சொல்ல, இடையில் புகுந்த நம் ஆசிரியர் “சதாபிஷேகம் என்றால் என்ன அய்யா?” என்றார்.
“அதுதான் 80-ஆம் ஆண்டு நிறைவு விழா” என்றவர் அதோடு விடவில்லை “50 வயதுக்கு மேல் இந்த ஜாதகத்தில் இருப்பவருக்குப் பெரும் பதவி வந்து சேரும் கலையுலகின் நட்சத்திரம் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் நட்சத்திரமாய் ஜொலிப்பார்” என்றெல்லாம் மூச்சு விடாமல் கொட்டிய உலகநாதன், இடையிடையே லக்னம், ராசி, குரு பார்வை என்று ஜோதிட நகாசுகளையும் சேர்க்கத் தவறவில்லை.
“சிவாஜிகணேசன் போன்ற சிம்மக்குரல் உங்களுக்கு! நீங்கள் பலன்களைப் படியுங்கள்” என்று சொல்ல உலகநாதனும் (பாவம்) படிக்க, வீடியோவில் பதிவு செய்து கொண்டோம்.
எல்லாம் முடிந்த பிறகு “விருது(?) கொடுத்த பிறகு நீங்கள் வெளியில் தலைகாட்டவே முடியாது! அந்தளவிற்குப் பிரபலமாகி விடுவீர்கள் என்று சொல்ல, விவரம் தெரியாமல் வெகுளியாய்ச் சிரித்தார் ஓம் உலகநாதன்.
அடுத்து நாம் விரித்த வலையில் மாட்டியவர் ஜோதிட சக்ரவர்த்தி, டி.வி புகழ், புரொபஸர், டாக்டர் முருகு ராஜேந்திரன் டி.லிட்.,
நமது அலுவலகத்திலிருந்து போன் செய்து, “மேலிடத்தில் செல்வாக்குப் பெற்ற ராமலிங்கம் என்கிற முக்கிய வி.ஐ.பி உங்களைப் பார்க்க விரும்புகிறார், தென் மாவட்டக்காரர்” என்றவுடன் “என்ன சார்! ஏது? என்றுகூடக் கேட்காமல், உடனடியாக வரும்படி அழைப்பு வந்தது. கழுத்தில் பத்து பவுன் முறுக்குச் சங்கிலி, கையில் பிரேஸ் லெட்டுகள், விரல் நிறைய மோதிரங்கள் என்று மேலிடத்து செல்வாக்கு பெற்ற விஅய்பி ராமலிங்கமாக தயாரானார் நமது ஆசிரியர். அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக, உதவியாளர்களாக நாமும் உடன் கிளம்பினோம்.
ராமலிங்கத்தின் குவாலிஸ் கார், வடபழனி கோயில் அருகே இருக்கும் முருகு ராஜேந்திரன் அலுவலகத்தில் நின்றது. வாசலிலேயே பத்து, பதினைந்து பேர் முருகு ராஜேந்திரனிடம் தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர். ஆனால் ராமலிங்கம் ஒரு விஅய்பி என்பதால் அவரை உடனடியாக ஜோதிடரிடம் அழைத்துச் சென்றனர.; அவரது அடிப்பொடிகள் கனகம்பீரமாய் ராஜநடை நடந்து ஜோதிடர் அறைக்குச் சென்றார் ராமலிங்கம்.
அறை முழுவதும் நிரம்பிய சாம்பிராணி வாசம், மாலைகள் போடப்பட்ட பெரிய பெரிய கடவுள் படங்கள், அளவோடு வெளிச்சம் தரும் விளக்குகள் என்று அந்த ஏரியாவே பக்தி சுனாமி சுழன்றடித்துக் கொண்டிருந்தது.
நெற்றி நிறைய சந்தனம், குங்குமம், சபாரி சூட் என்று கிழக்கு, மேற்கு கலவையாக காட்சி தந்த ஜோதிடர் முருகு ராஜேந்திரன், “உங்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன்(!)” என்று பணிவுடன் ராமலிங்கத்தை வரவேற்றார். அடுத்ததாக முருகு “நான் பல டி.வி.க்களிலே மக்களுக்கு நற்செய்தி (அட!) சொல்லிகிட்டு இருக்கேன்! ஜெயா டி.வி.யிலும் தினசரி பேசறதுக்கு வாய்ப்பு வேணும்” என்று கெஞ்சலாய்க் கேட்டார்.
இந்நேரம், விஅய்பி ராமலிங்கமாகவே மாறிவிட்டிருந்த நமது ஆசிரியர் “அதெல்லாம் பத்து நிமிட வேலை, கவலைப்படாதீங்க” என்று அசால்ட்டாகச் சொல்ல முருகுவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்!
பிறகு “ராமலிங்க ஜாதகத்தை நீட்ட அதை வாங்கிப் பலவித கட்டங்கள் போட்டார் முருகு, அடுத்ததாக, வாய்க்குள் முணுமுணுத்தபடியே சில பல கணக்குகளை காகிதங்களில் வரைந்தவர் கொஞ்ச நேரம் ராமலிங்கத்தையே உற்றுப் பார்த்தார். பிறகு “நீங்கள் மேட லக்னம், மிதுனராசியில் பிறந்திருக்கிறீர்கள். சனி நீசம் பெற்றாலும் நீசபங்க ராஜயோகம் உண்டு, ஆயுசு உங்களுக்கு70 க்கு மேல்” என்றெல்லாம் ஜோதிட டெக்னிக் வார்த்தைகளை அள்ளி வீசியவர் அடுத்ததாக நமக்குப் புரியும் பாஷைக்கு வந்தார். “பிறக்கும்போதே கோடீஸ்வரராகப் பிறந்தவர் நீங்கள். வரும் 2006 யூலைக்குப் பிறகு உங்களுக்கு ராஜயோகம் உச்சத்தில் இருக்கிறது. மிகப் பெரிய பதவிகள் எல்லாம் உங்களைத் தேடி வரும். அவ்வளவு ஏன் வெளிப்படையாகவே சொல்கிறேன் உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும்(!) வாழ்நாள் முழுதும் அரசனைப் போல வாழ்வீர்கள்” என்று சொல்லச் சொல்ல கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.
ராமலிங்கத்தின் முக பாவனைகளைக் கவனித்து வந்த பிறகு “உங்களுக்குப் புத்திர பாக்கியமில்லை அதனால் காளகஸ்தியில் தோஷப்பரிகாரம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் புத்திரதோஷம் நீங்கிக் குழந்தை பிறக்கும். நீங்கள் ஒரு விஅய்.பி! அதனால் வெளிப்படையாக வந்து, யாகத்தில் கலந்து கொண்டால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் ஆகவே, பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் நானே செய்து விடுகிறேன்” என்றார் மெஸ்மரிசக் குரலில்.
ராமலிங்கம் “என் அக்கா திலகவதியோட ஜாதகம் 36 வயசிலேயே.’’ என்று கண் கலங்க நாம் அவரை அமைதிப்படுத்தினோம். இதைக் கவனித்தபடியே, ஜாதகத்தை வாங்கிக் கணக்கு போட்ட முருகு “உங்கள் சகோதரி கணவனை பிரிஞ்சிரிக்கணும் அல்லது கணவன் இறந்திருக்கணும் சரிதானே...” என்றபடி படபடவென பேச ஆரம்பித்தார.; “ஆனாலும் பரவாயில்லை உங்கள் சகோதரிக்கு மறுமணம் உண்டு! வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு! 20 வருடத்திற்கு அவளை யாரும் அசைக்க முடியாது” என்றார்.
உடனே ஆசிரியர் “சாமி! கண்ணுக்கு எதிரே நடந்த மாதிரி, என் வாழ்க்கையில் நடந்ததை சொல்றீங்க! உங்களோடு போட்டோ எடுத்துக்க ஆசை” என்று சொல்ல, “வாஜ்பாய், முரளிமனோகர் ஜோஷி எல்லோரும் என்கூட போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டு, எடுத்துக்கிட்டாங்க! நீங்க ஆசைப்படறதிலே எந்த ஆச்சரியமும் இல்லை தம்பி!” என்றார் (வாங்க, போங்க போய், இந்நேரம் தம்பி ஆகிவிட்டிருந்தார் ஆசிரியர்) முருகு.
கிளம்பும் நேரத்தில், “எப்படி அய்யா, இவ்வளவு சரியா வாழ்க்கையைக் கணிக்கிறீங்க?” என்று மீண்டும் கண்களில் ஆச்சரியம்காட்டி ராமலிங்கம் கேட்க, மந்தகாசச் சிரிப்புடன் சொன்னார் முருகு “எனக்கு ஒவ்வொருத்தரோட பிறப்பு ரகசியமே தெரியும்! எப்பப்போ, யார் யாருக்கு என்னென்ன நடக்கும்னு எனக்குத் தெரியும்” என்றவர் அடுத்ததாக கேட்டதுதான் உச்ச கட்டம்!
“தம்பி! ஜெயா டி.வி.யிலே என் புரோகிராமுக்கு எப்போ ஏற்பாடு பண்ணுவீங்க? இன்னும் கொஞ்சம் பப்ளிசிட்டி வேணும்!” என்றார். ராமலிங்கம் பணிவுடன் சொன்னார் “தமிழகம் முழுக்க, உங்களுக்கு சூப்பரான பப்ளிசிட்டி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு!”
அடுத்து, ராமலிங்கம் சென்றது பெயரியல் பேராசான் ராஜராஜனிடம். விருகம்பாக்கம் சந்தைக்கு அருகில் இருக்கிறது இந்தப் பேராசானின் ஜோதிட அலுவலகம். உள்ளே நுழைந்ததும் ஆர்.எம் வீரப்பன், திருநாவுக்கரசர், விஜய டி ராஜேந்தர், சிரிப்பு நடிகர் பாண்டு ஆகியோரின் பெரிய பெரிய படங்கள்.
நம்மை வரவேற்ற ராஜராஜன் எடுத்த எடுப்பிலேயே ஹை பிட்சில் தனது ஆலாபனையை ஆரம்பித்து விட்டார் “இந்த கண்ணப்பன் இருக்கானே நடுவுல கஷ்டப்பட்டான். பேரு முன்னால “இராஜ“ன்னு சேருன்னு சொன்னேன். சேர்த்ததும் அவன் பிரச்சினை எல்லாம் தீர்ந்துடுச்சு. திருநாவுக்கரசை நான்தான் திருநாவுக்கரசர்னு பேரமாத்தி எம்.பி ஆக்கினேன். “பி.ஜே.பி.யிலே சேருன்னு சொன்னதே நான்தான். ஏன் நம்மகிட்ட வராத சினிமாக்காரனே கிடையாது. மன்மதன் படம் எடுத்தானே கிருஷ்ணகாந்த், அவன் பழைய பேரு முருகானந்தம். நான்தான் பேரை மாத்தினேன் சினிமாவுல சண்டை போடற ஜாக்குவார் தங்கத்துக்கிட்டே “பேருக்கு முன்னாலே |