Header
dravidar - periyar - home dravidar - periyar - articles dravidar - periyar - photo gallery   dravidar - periyar - links dravidar - periyar - contactus
dravidar - periyar - tamilnadu
dravidar - periyar - news dravidar - periyar - pdk dravidar - periyar - periyar mulakkam dravidar - periyar - marriage without caste dravidar - periyar - ebooks dravidar - periyar - audiovideo
 
leftside
 
 

குணா கும்லின் புதியமுகம் மணியரசன் !  -

பழனி வ.மா.ஓ
 

தோழர் பெ.மணியரசன் அவர்களால் கட்டுரையாக எழுதப்பட்டு, தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியிடப்பட்ட திராவிடம் - தமிழ்த்தேசியம் என்ற கட்டுரை திருச்சி தமிழ்  கலைப் பேரவையின் சார்பாக நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற கட்டுரைகள் அவ்வப்போது பட்டும் படாமலும் எழுதப்பட்டிருந்தாலும் தற்போது பூனை வெளியேவந்துவிட்டது என்பதுபோல தனது பார்ப்பன சார்பு போக்கை பகிரங்கப்படுத்திவிட்டது. தோழர். பெங்களுர் குணா ( தற்போது ~தமிழர் கண்ணோட்டத்தினால~; அறிஞர் குணா )  தோழர். இரவிக்குமார் ...  இவர்களின் அடிச்சுவட்டின் வரிசையில் பெ.மணியரசன்.
    
தோழர்.பெ.மணியரசன் எழுதியுள்ள இந்தக்கட்டுரையில் எந்தப் புதிய செய்தியும், ஆய்வுகளும் இல்லை.  ஆனாலும் இதுபோன்ற திரிபுவாதக்கருத்துக்கள் உண்மைபோன்று முன்வைக்கப்படும்போது அதனை மறுத்து பெரியாரியல் ஆய்வு நோக்கில் உண்மைகளை எடுத்து முன்வைக்க வேண்டியே உள்ளது. அதன்படியே தோழர்.குணா எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலுக்கு மறுப்புதெரிவித்து பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் என்ற நூலும் வந்தது. அதிலும் இதுபோன்ற குழப்பங்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.  பெரியாரைப் பாரட்டிக்கொண்டே இதுபோன்று எழுதுவோர் கூட்டம் பெருகிக்கொண்டே உள்ளது.  இதற்கு காரணம் அம்பேத்கர் அவர்களுக்கு தொகுப்பு நூல் வரிசை வெளியிடப்பட்டதுபோல பெரியாருக்கும் வெளியிடப்படாமையே காரணம் ஆகும்.
    
 இந்த திராவிடம் தமிழ்த்தேசியம் என்ற கட்டுரை எந்தச்சூழலில் எழுதப்பட்டுள்ளது என்பது இங்கே கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது.
 
 1.  ~இந்தியாடுடே~ இதழுக்கு ஒருபேட்டி கொடுத்ததைத் தொடர்ந்து தமிழக அளவில் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் கூறப்பட்டன. த.க. எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டது. அதனை விமர்சன நோக்கி;ல் கற்பு தொடரும் விவாதம் என்ற தலைப்பி;ல் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் விமர்சித்து சில கருத்துக்களை வெளியிட்டார்.

 2.  திராவிடர்கழக பெரியார் பேருரையாளர் அ. இறையானாரின் அமெரிக்கர், இந்தியர் கருத்துக்கு பதிலளித்தும் எழுதப்பட்டுள்ளது. பொதுவாகவே தமிழர் கண்ணோட்டம் பண்பாடு, கலாச்சாரம் நோக்கில், பாலியல், கண்ணகிசிலை போன்ற பிரச்சனைகளில் பிற்போக்கான கருத்துக்களையே கொண்டுள்ளது. 

 வரலாறு என்பது மறைந்து ஒரு பொருளின், இனத்தின், கலையின் தொன்மையை மட்டும் குறிக்கும் அவ்வளவே. அந்த வரலாற்றின் வாயிலாக பொருளின் - இனத்தின் - கலையின் இருப்பை, உரிமையை, மானத்தின் காக்கமுடியுமா? எனில் அதன் பங்களிப்பு மிகச்சொற்பமே ஆகும். வரலாற்றின் வழியாக நாம் பழம்பெருமை பேசுவதா? அல்லது அறிவியல் நோக்கில் சமூகத்தை இட்டுச்செல்வதா? என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

 முதல் குடியரசிலிருந்து, மரணசாசனம் வரை பெரியார் பல்வேறு படிநிலைகளைக் கடந்து நிற்கிறார் என்பதை பெ.ம உட்பட யாரும் மறுக்கமாட்டார்கள். அதே சமயம் திராவிடம், தமிழ்த்தேசியம் என்ற கருத்தாக்கமும் அன்று ஏற்பட்டிருக்கவில்லை. இன்று தமிழ்த்தேசியம் என்ற கருத்தாக்கம் பரவலாக பேசப்படுகிறது. இதனை அனைத்து தமிழ்த்தேசிய முற்போக்கு அமைப்புகளும் ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டை எட்டவேண்டியுள்ளது. இதற்கு முதலில் தேசியம் என்றால் என்ன? என்று அறியவேண்டும்.

 இன்றைய நிலையில் தேசிய இனம் என்பதற்கு விரிவாக விளக்கம் தரப்படுகிறது. ஒரு பொது மொழியையும், வாழ்க்கை முறையையும், வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பையும், பொதுப்பொருளியல் அமைவையும், தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகளையும், அவற்றால் உருவான உளவியல் உருவாக்கத்தையும் பெற்ற வரலாற்று அடிப்படையில் அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனம் என்று வரையறைப்படுத்தப்படுகிறது.  (தன்னுரிமை தமிழ்த்தேச எழுச்சி முரசு பக்கம் 23)

இனி தமிழ்தேசியம் என்பதற்கு பெ.ம கொடுக்கும் விளக்கம் வருமாறு..

      ~எனது தேசம் தமிழ்த்தேசம்! எமது தேசியமொழி தமிழ்! எமது தேசிய இனம் தமிழர்! எமது இலக்கு தமிழ்த்தேசகுடியரசு நிறுவுதல்! என்பதே தமிழ்த்தேசியம். 

      தமிழர் இனப்பெருமை பேசுவதோ, தமிழ் மொழிப்பெருமை பேசுவதோ மட்டும் தமிழ்த்தேசியம் ஆகாது. மேற்கண்ட வரையறுப்பும், இலக்கும் கொண்டதே தமிழ்த்தேசியம்~ (திராவிடம் தமிழ்த்தேசியம்;: பக்கம் 37)

       தமிழ்த்தேசியம் என்ற வரையறைக்கு பெ.ம கொடுத்துள்ள விளக்கம் மலைக்கும், மடுவுக்கும் வேறுபாடுள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
        
 

~பொதுவாகவே தேசியம் என்னும் வார்த்தையே அர்த்தமற்றது என்றும் மோசக் கருத்துக் கொண்டது என்றும் அதில் பணக்காரத்தன்;மை பிரதிபலிப்பதோடு பணக்காரத்தன்மைகயை ஆதரிப்பதற்கென்று கற்பிக்கப்பட்டதென்றும் பலதடவை கூறி வந்திருக்கிறோம். நாம் மாத்திரம் அல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்கின்ற ஒருமேதாவி
(தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம் என்று - அதாவது பிழைப்பிற்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழிபிழைப்பிற்கு மார்க்கமானது~ என்று கூறியிருக்கிறார்-பெரியார்.. (பகுத்தறிவு 9.9.1934)

     அடுத்து பெரியார் திராவிடர் என்ற சொல்லை ஏன் முன்வைத்தார்? தமிழர் என்ற சொல்லை ஏன் தவிர்த்தார்? என்பதற்கான காரணங்களை கூறியுள்ளார். அதனைத்தான் பெ.ம பெரியாரின் மேற்கோள்களாக தமது நூலில் காட்டியுள்ளார்.  அதனையும் 1948-இல் பேசிய மேற்கோள்களை முன்பாகவும், 1944-இல் பேசிய மேற்கோள்களை பின்பாகவும்போட்டு தமது கட்டுரைக்கு ஏற்றார்போல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். மேற்கோளின் முக்கியமான முன்பின் பகுதிகளை விட்டுவிட்டார். மேற்படி மேற்கோள்களின் அடிப்படையில் பாத்தால் பெரியார் ஓர்சர்வாதிகாரிபோலவும், பொதுகருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் போலவும், வரலாற்று உண்மைகளை மறைத்திட்டவர்போலவும் தோன்றும் .
 ஆகவே பெ.ம எடுத்தாண்டுள்ள மேற்கோள்களின் முழுமையும் நாம் இங்கே கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  (மேற்கோள் 1 பெரியார் சிந்தனைகள் பக்கம் 545 முதல் 549).

     ~தோழர்களே! நாம் இந்தியர் என்பதை மறுக்கிறபடியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெறவேண்டுவதாலும் ~திராவிடர்~ என்னும் பெயரைக்கொண்டோம்.  இது புதிதாக உண்டாக்கியதல்ல: மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மை குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கிறோம். ~அல்லாதார்~ என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் - ~அல்லாதார்~ ஆகவேண்டும்?

  சிலர் திராவிடன் என்பது வடமொழி என்பார்கள். அதைப்பற்றிய கவலையோ ஆராய்ச்சியோ தேவையில்லை. காபி என்பது ஆங்கிலச்சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கின்றானா? மேலும் நமக்கு, திராவிடர் என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனரல்லாதார் என்பதா? பார்ப்பனரல்லாதார் என்று கூறிக்கொள்ளும் ஜஸ்டிஸ் கட்சிக்கார்கள், எந்த வகையில் பார்ப்பனரிலிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில் மதத்துறையில் வேஷத்தில் பார்ப்பானைவிட இரண்டுமடங்காக அல்லவா இருக்கின்றார்கள்.  இந்தப்பார்ப்பனரல்லாதார் வீட்டுக்கலியாணம், கருமாதி, சாந்திமுகூர்த்தம், திவசம், பூசை எல்லாம் பார்ப்பான் இல்லாவிட்டால் ஆகாது. உத்தியோகத்தில், தேர்தலில் மட்டும் பார்ப்பானுடன் போட்டி போடவேண்டமென்றால் யார் ஒப்புக்கொள்வார்கள்? ( கும்பகோணத்தில் 26, 27.11.1944-இல் சொற்பொழிவு-குடியரசு-9.12.1944).
 
 முகம்மதியர் என்று இதுகாறும்; சர்க்கார் ரிக்கார்டுகளில் இருந்துவந்த பெயருக்குப்பதிலாக முஸ்லிம்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் தங்கள் பிரியப்படி தம் சமூகத்தின் பெயரைமாற்றிக்கொண்டனர். சர்க்காரும் ஆவர்களது கோரிக்கைக்கு உடனே இணங்கிவிட்டனர். ஆனால் திராவிட நாட்டின் பழங்குடி மக்களுக்குமட்டும் ஒரு தனிப்பெயரில்லாமலிருப்பது பெரிய வெக்கக்கேடு!

 தேர்தல் பட்டியல்களிலும், தேர்தல் சம்மந்தமான பல ரிக்கார்டுகளிலும் முகம்மதியரல்லாதார்; என்ற பிரிவின் கீழ்க்குறிக்கப்பட்டிருக்கும் கூட்டத்தாருக்கு என்ன பெயர் கொடுக்கவேண்டும் என்பது பற்றி இதுவரையில் காங்கிரஸ் மந்திரிசபையார் ஆலோசித்துப் பார்க்கவில்லையென்றே தெரிகிறது.  இவர்களுக்கு இந்துக்கள் என்ற பெயரை கொடுக்கலாமே என்று சிலர் கூறலாம். இந்தமதம் என்றால் எது? அதன் கொள்கைகள், பழக்கவழக்கங்கள் எவை? அதன் மூலநூல் எது? அதைப் பி;;;ன்பற்றுவோரின் நடத்தை, ஒழுக்கம் முதலியன எப்படியிருக்கவேண்டும்? அதன் கடவுள் எது? ஆகியவை போன்ற கேள்விகளுக்குப் பதில் கூறுவதற்கு எந்த மத ஆராய்ச்சி நிபுணராலும் முடியவில்லை.  ஏனெனில் முன்னுக்குப்பின் முரணான கொள்கைகளும் நேர் எதிர்ப்பான நடவடிக்கைகளும், ஒன்றை ஒன்று தாக்கியழிக்கும்படியான கடவுள் தன்மைகளும், புராண இதிகாசங்களும் நிறைந்த ஒரு பெருங்குப்பைத ;தொட்டி போன்று காட்சியளிப்பதுதான் இந்துமதம். இதைப்பல ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக ;கொண்டிருக்கிறார்கள். இச்சமயம் இதுபற்றி விரித்தெழுத இடமில்லை.

   எனவே இந்துமதம் என்பதே இன்னதென்று விளக்கிக்கூற முடியாமலுள்ள நிலைமையில், அதைப் பின்பற்றுவர்களுக்கு, அதாவது அதைசேர்ந்தவர்கள் எனக்கருதப்படுபவர்களுக்கு, இந்துக்கள் என்ற பெயர் கொடுப்பதை பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பதில் ஆச்சரியமில்லை. சர்க்கார் ரிக்கார்டுகளில் உத்தியோகம், கல்வி ஆகிய துறைகளைப்பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தனிப்பெயர் கொக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
 
 ஆங்கிலோ இந்தியர், முஸ்லிம், கிறிஸ்தவர், ஷெட்யூல்டு வகுப்பார், பிராமணர் என்று தனித்தனிப ;பெயரில்லாமல், பிராமணரல்லாதார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெருத்த அவமானமாகவும் அக்கிரமமாகவும் இருக்கிறது. இந்நாட்டுக்குச் சொந்தமான மக்களுக்கு ஒரு பெயரில்லாமல் பிராமணரல்லாதார் என்றழைக்கப்படவேண்டிய இழிநிலையை இதுவரையிலுpருந்த சர்க்கார்கள்தாம் போக்கவில்லையென்றால், இப்போதுள்ள சர்க்காராவது நீக்கவேண்டும் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்.

   மக்கள், தேவர், நரகர் உயர்திணை: மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை என்று தமிழ் இலக்கணங்களில் கூறப்படுவதுபோல், திராவிடர்களாகிய நம்மை, பிராமணரல்லாதார் என்று ஒரு    அஃறிணைப் பொருளைப்போல மதித்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்பதற்கேனும் நேரமில்லையே!
 
 100க்கு 3 பேர்களாயுள்ள ஒரு சிறு கூட்டம், அதுவும் இந்நாட்டிற்கு குடியேறிய அன்னியர்கூட்டம்  இந்த கூட்டத்தின் பெயரைமட்டும் கூறி - இது அல்லாத பிறர் என்று 414 கோடிப் பெருங்குடி மக்களை குறிப்பிடுவது முட்டாள்தனமான ஒரு முறை என்றே கூறுவோம்.
 
 திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேடவேண்டிய அவசியமேயில்லை. முதல் வகுப்புச ;சரித்திரப்பாடம் முதல், பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரமிருக்கிறது. பழக்க வழக்கங்களிலும் ஆதாரமிருக்கிறது.  கலாச்சாரங்களிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.

   ஆகையால் இனிமேல் திராவிடர் என்று நம்மையும் திராவிடரல்லாதார் அல்லது ஆரியர் என்று பிராமணரையும் சர்க்கார் ரிக்கார்டுகளில் குறிப்பிடவேண்டும். கிறிஸ்தவர், ஷெட்யூல்டு வகுப்பார், முஸ்லிம்கள் ஆகியோரும் திராவிடர் என்ற பிரிவில் சேருவார்களே என்று சிலர் கேட்கலாம். ஆமாம். உண்மைதான். அப்படியானால் இப்போதுள்ள பிராமணரல்லாதார் என்ற பிரிவில் மட்டும் இவர்கள் சேர்க்கப்படக் காணோமே. ஆகையால் தனி இனம் என்ற பொதுப்பிரிவில் இவர்கள் எல்லோரும் திராவிடர் என்பதே சரியென்றாலும் உத்யோகம் கல்வி தேர்தல் ஆகிய எல்லாத்துறைகளிலும் இப்போது யார? யார்? பிராமணரல்லாதார்? என்ற பிரிவின்கீழ் வருகின்றார்களோ அவர்கள் எல்லோரும் திராவிடர் என்ற பெயராலேயே அழைக்கப்படவேண்டும்.
 
 இவ்விசயம் கட்சிவேற்றுமையில்லாத ஒன்றாகையால் காங்கிரஸில் உள்ள திராவிடத்தோழர்களும், திராவிட மந்திரிகளும் இதை உடனே கவனித்து நம்மை திராவிடர் என்ற பெயரால் குறிப்பிடும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு வற்புறுத்தவேண்டுகிறோம். (விடுதலை 18.9.1946)
 
 திராவிடமொழிபேசும் திராவிடரைப்பற்றி சிறிது கூற ஆசைப்படுகிறேன். திராவிடம் என்பது நாட்டினுடைய பெயராகும். திராவிடர் என்பது இந்நாட்டின் பழங்குடி இனத்திற்கு எற்பட்ட உலகப ;பெயராகும். திராவிடர் என்பதை நம்மில் சிலர் மறுக்கிறார்கள். வெறுக்கிறார்கள். திராவிடர் என்பது என்ன? நாம் கற்பித்த ஒரு பெயரா? இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. ஆரியர் என்ற பெயர் தோன்றிய அன்று ஏற்பட்ட பெயர்தானே திராவிடர் என்பது. நீக்ரோ, மங்கோலியர் என்ற பெரயர்கள் ஏற்பட்டதும் அன்றுதானே. திராவிடர் என்ற பெயரை மனுதர்ம நூலில் காணலாமே. இராமாயணத்தில், பாரதத்தில்கூட இதற்கு ஆதாரமுண்டே. இந்த நாட்டை பொறுத்தவரையில் இதுவரைக்கும் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர் திராவிடர் போராட்டமே ஒழிய வடமொழி - தென்மொழி போராட்டமல்லவே. இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே.

   வடநாட்டு- தென்னாட்டுப்போராட்டம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. புராணகாலம் முதற்கொண்டு இருந்துவந்திருக்கிறது. இதிகாசங்களுக்கெல்லாம் முந்தியது புராணம். புராணங்களுக்கெல்லாம் முதன்மையானது கந்தபுராணம். கந்தபுராணத்திலேயே இந்த வடநாடு தென்நாடு போராட்டம் துவக்கப்பட்டுவிட்டது.  அதிலுள்ள சிறு கதையை கேளுங்கள். கதை கற்பனையாக இருந்தாலும்; அதிலுள்ள கருத்தை கவனித்துப்பாருங்கள்.  ஆரியக்கடவுளாகிய சிவனுக்கும் (ஆரியர் தலைவன்) பார்வதிக்கும் வடநாட்டில் திருமணம் நடக்கிறது. அப்போது தேவர்கள் (வடநாட்டவர்- ஆரியர்கள்) தென்னாடு உயர்ந்துவிட்டதையும், வடநாடு தாழ்ந்துவிட்டதையும் சிவனிடம் வருத்தத்துடன் கூறுகிறார்கள். சிவன் தென்நாட்டை தாழ்த்த வேண்டி அகத்தியனை அனுப்புகிறார். அகத்தியன் தெற்கு நோக்கி வருகிறான்: திராவிடநாட்டின் வடக்கெல்லையான விந்தியமலை அவனை தடுக்கிறது. அகத்தியன் சினந்து அம்மலையை அழுத்திவிடுகிறான்.  ( அங்குள்ள மக்களை வென்று விடுகிறான்) மேலும் தெற்கு நோக்கி செல்கிறான். வாதாவியும், வில்வனும் தடுக்கிறார்கள். அவர்களையும் வென்று கொண்டுபோய்த்தென்னாட்டில் இராவணனுடைய ஆதிக்கத்தை தகர்ததெறிந்து, தமிழை உண்டாக்கினான்.  அதாவது, முதலில் மொழியில்தான் அகத்தியன் கை வைத்தான்: மொழியை ஒழிக்கும் வேலைதான் அவர்களின் முதல் வேலை: இதுதான் அவர்களின் நடைமுறைப்பழக்கம்.

   இந்த வடநாட்டுப் போராட்டம் நான் துவக்கியது அல்ல. கந்தபுராண காலத்திலே வாதாவியில் துவக்கப்பட்டது.  இது ஆரியப்புராணம் கூறுவது. அன்றுதொட்டு இடைவிடாது இருந்துவரும் இயற்கைப் போராட்டம்தான் இது. ஆரியம் ஒழிந்து, ஆரியர்கள் அத்தனைபேரும் திராவிடர்களாகும் வரையிலும், அல்லது அவர்கள் அத்தனைபேரும் திராவிடநாட்டை விட்டு வெளியேறும் வரையிலும் இப்போராட்டம் இருந்தே தீரும்.  உடற்கூற்று வல்லுனர்கள்  அந்தந்த நாட்டுத் தட்பவெப்பத்திற்கேற்ப அமைந்த அங்க, மச்ச அடையாளங்களைக்கொண்டு பாகுபடுத்திக்ககொடுத்த இனப்பெயர்கள்; தாமே ஆரியர் - திராவிடர் என்பவை! இப்பிரிவுகள் தேவர்களாலோ,கடவுளாலோ, உண்டாக்கப்பட்ட பிரிவுகள் அல்லவே. அறிவுள்ள மக்களால் பிரிக்கப்பட்டு, மற்றவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, வழக்கத்தில் இருந்துவரும் பெயர் தாமே இவை? இவர்களைப் பிரிக்க இரத்தப்பரிச்சை செய்யவேண்டியதில்லையே. ஆடையின்றி பிறந்தமேனியாய் நிறுத்தினால்கூட இவன் ஜப்பானியன். இவன் நீக்ரோ, இவன் திராவிடன், இவன் ஆரியன் என்று பிரித்துவிடலாமே. நாய்களைப் பிரிக்கவில்லையா நாம்.? இது கோம்பை, இது புல்டாக், இது சிப்பிப்பாறை, இது இராஜபாளையம்: இது சீமை என்று? குதிரையைப் பிரிப்பதில்லையா? நாம். இது அரபிக்குதிரை: இது ஆஸ்திரேலியக்குதிரை: இது வேதாரணித்தட்டு என்று! இவற்றையெல்லாம் பிரிக்கும்போது மக்களைத்தானா பிரிக்கமுடியாது? இது போகட்டுமே! நாம் பிறவி பார்த்து இனப்பிரிவினை செய்யும்படி கேட்கவில்லையே? அவரவர் கொண்டாடும் உரிமைகளைக்கொண்டுதானே பிரிக்கும்படி சொல்லுகிறோம்.

   தமிழர் என்பது மொழிப்பெயர். திராவிடர் எனபது இனப்பெயர். தமிழ்பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ்பேசும் அத்தனைபேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்த சமயத்தை சார்ந்தவனாயிரந்தாலும் எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால் திராவிடமொழி தமிழ் என்ற காரணத்திற்காக தமிழ்பேசும் திராவிடனல்லாத ஒருவன் மொழிகாரணமாக மட்டுமே தன்னை திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழன் என்று கூறிக்கொண்டு நம்முடன்; கலந்துகொண்டு நம்மை கெடுக்கப்பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆச்சார அனுஷ்டானங்களையும் பேத உணர்ச்சியையும் விட்டு திராவிடப்பண்பை ஒப்புக்கொண்டு அதன்படி நடந்தால் ஒழிய நாம் அவனை திராவிடன் என்று ஒப்புக்கொள்ளமாட்டோம்.

   பண்டைத் திராவிடமக்களின் பழக்கவழக்கங்களை ஒட்டி அதில் ஏதாவது தவறு இருக்குமானால் அதையும் களைந்துவிட்டு ஒரு திராவிடன் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று ஏற்பாடு செய்தால் அந்த ஏற்பாட்டுக்கு உட்பட்டு நடக்க ஒப்புக்கொள்பவனைத்தான் திராவிடன் என்று கூறுவோமே அல்லாது சி.பி. இராமசாமி அய்யரையும், இராசகோபாலாச்சாரியாரையும் கூட அவர்களின் பண்பு திராவிடபண்பாக மாறும் வரை திராவிடஇனத்தில் சேர்த்துக்கொள்ளமாட்டோமே.  தமிழர் என்பதில் இவ்வளவு நிபந்தனைகள் உண்டா? இதைத் தவிர திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்? எங்கள் நடத்தையிலோ, அன்பிலோ உங்களுக்கு சந்தேகம் எழத்தான் என்ன காரணம் இருக்கமுடியும்.?  தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனைபேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த, நமக்கு மாறுபட்ட கலச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா?

 இழிவுக்கும், தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறாக இவ்விழிவிற்கே காரணமான உயர்சாதி மக்களையும் ஒன்றாக்கிக்கொண்டால் அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும். பிறகு எல்லோரும் ஒன்றாவோம்.
 
 இந்நாட்டு கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும் தம்மை திராவிடர் அல்லர் என்று கருதுவார்களானால் தம்மை சூத்திரர் அல்லர் என்று கருதுவார்களானால் அதைப ;பற்றியும் நமக்கு கவலையில்லை. ஆனால் உண்மையில் ஆரியம் அவர்களை சூத்திரருக்கும் தாழ்ந்தவராக அதாவது மிலேச்சர்கள் என்பதாகத்தான் கருதிவருகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். வைசியன் தன்னை ஆரிய வைசியன் என்று கூறிக்கொண்டாலும் ஆசாரி தன்னை விஸ்வ பிராமணன் என்று கூறிக்கொண்டாலும்,  gs;sh; தன்னை தேவேந்திரகுல வேளாளன் என்று கூறிக்கொண்டாலும், படையாட்சி தன்னை வன்னியகுல சத்திரியன் என்று கூறிக்கொண்டாலும், ஆரியம் இவர்கள் அத்தனை பேரையும் சூத்திரன் என்ற பிரிவில் ஒன்றாகத்தான் கருதிவருகிறது என்பதையும், கோவிலில் ஒரு குறிப்பிட்ட வரையில்தான் இவர்கள் அத்தனைபேரும் போகமுடியும் என்பதையும் இவர்கள் உணரவேண்டுகிறேன்.
 
 பிராமணர், பிராமணமகாசபை வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப்    பெருமையும், உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர்சாதியானுக்கு அடிமையாய் இருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பானின் தாசிமக்கள் என்ற பட்டம்தான் கிடைக்கும். அந்த சூத்திர தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக்கொண்டிருப்பதால்தான் அப்பெயரால் எவ்விதச்சலுகையோ, உரிமையோ கிடைக்காத தால்தான் அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே இழிதன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைஷ்யர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்துவிடுவார்கள். ஆதலால்தான் நம்மை சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்கிறோம். சூத்திரர் என்பவர்களுக்கு திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக்கேட்டுக்கொள்ளவும் தயாராய் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே கூறிய அத்தனைபேரும் ஒன்றுசேர வசதியிருக்கவேண்டும்.  அதில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூட புகுந்துகொள்ள வசதியிருக்கக்கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்கவேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ளமுடியாது. நாம் ஒழிக்கப்பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே அவர்களை சேர்த்துக்கொள்வதற்கு காரணம் இல்லை.
 
 ஆரியராவது திராவிடராவது அதெல்லாம் இன்றில்லை என்பீர்கள் இங்கே வாருங்கள் பேசாமல் மேல்துண்டு போட்டுக்கொண்டு நால்வருணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்.  பார்ப்பான் உங்களை
எல்லாம் ஒரே இடத்தில் விட்டுவிட்டு உள்ளே நுழைகிறானா இல்லையா பாருங்களேன்.


(ஈ.வெ.ரா.சி.பக்கம்547-549).   

 பெ.மணியரசன் அவர்களின்  மயிர் பிளக்கும் வாதம்

இனம் என்கிற கருதுகோளில் இருவித தன்மைகள் உண்டு. ஒன்று நிற இனம். மற்றொன்று தேசிய இனம். தேசிய இனம் என்கிற கொள்கை புதிதாக அரும்பும் முதலாளித்துவ எழுச்சியுடன் தொடர்புடையது. தேசிய இனக்கொள்கைக்கு முன்பும் இப்போதும் கூட ஆதிக்க சக்திகளின் வலிமைவாய்ந்த கொள்கையாய் விளங்குவது நிற இனக்கொள்கையே. காலனிய ஆதிக்கத்திலிருந்தும் முடியரசின் பிடியிலிருந்தும் விடுதலைபெற விரும்பும் தேசியஇனங்களின் போராட்டங்களைக் கூட நிறவெறிக் கொள்கை நசுக்கிவிடத் துடிக்கிறது. வெள்ளை நிறத்தவர் உயர்ந்த இனத்தவர். மஞ்சள் நிறத்தவரும், கருப்பு நிறத்தவரும் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து இன்று வரையிலும் முன்நிறுத்தப்படுகிறது.

 மேற்குலகில் அய்ரோப்பிய ஆதிக்கச்சக்திகளுக்கு உதவும் இந்த நிற இனக்கொள்கை இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உதவுகிறது. வருணாசிரமதர்மம் என்று இன்றும் இங்கே அது போற்றப்படுகிறது. நீ என்ன சாதி என்று கேட்பதற்கு பதிலாக நீ என்ன வர்ணம் என்று பல கிராமங்களில் இப்போதும் கேட்கப்படுவது உண்டு. 

 பார்ப்பனர் அல்லாதார் யாவரும் தாழ்ந்தவர்களே என்பதுதான் வேதங்களும், கீதா உபதேசங்களும், மனுதர்மங்களும் வலியுறுத்தும் கோட்பாடாகும்.  உயர் வர்ணத்தவரான பார்ப்பனர்களே சாத்திரப்படியும், சமூக ஏற்பாட்டின்படியும் வணக்கத்திற்குரியவர்கள்: தெய்வீக உரிமைபெற்றவர்கள் என்கிற சனாதானக்கருத்தை அரசியல் சாசனத்தால் கூட மீற முடிவதில்லை.

 ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறு &