Header
dravidar - periyar - home dravidar - periyar - articles dravidar - periyar - media dravidar - periyar - photo gallery   dravidar - periyar - links dravidar - periyar - contactus
dravidar - periyar - tamilnadu
dravidar - periyar - news dravidar - periyar - pdk dravidar - periyar - periyar mulakkam dravidar - periyar - marriage without caste dravidar - periyar - ebooks dravidar - periyar - audiovideo
 
leftside
 
 

 


‘குடிஅரசை’ தடுக்கும் - வீரமணிக்கு கண்டனம்:
பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குக!
கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்!

பெரியாரை - பெரியார் திடலுக்குள் முடக்க நினைக்கும் வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க தமிழக அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுதும் பெரியார் திராவிடர் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஆகஸ்டு 25 திங்கள் கிழமையன்று எழுச்சியுடன் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். செய்தி விவரம்:

சென்னை

25.8.2008 திங்கள் மாலை 4 மணி அளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் கழகத் துணைத் தலைவர் ஆனூர் கோ. செகதீசன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் சு. குமாரதேவன், ‘சமூகநீதித் தமிழ்த் தேசம்’ இதழ் ஆசிரியர் தியாகு, மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் வீராசாமி, மார்க்சிய பெரியாரிய பொது வுடைமை கட்சித் தோழர் வாலாசாவல்லவன்,  பெண்ணியப் போராளி ஓவியா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் அன்பு தனசேகர், தபசி குமரன், இரா. உமாபதி, சேத்துப்பட்டு இராசேந்திரன், சீ. மணிவண்ணன், கரு. அண்ணாமலை, பொன்னேரி பன்னீர்செல்வம், அ. அருள்தாசு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் நூல்களும், சொத்துக்களும் எனக்கே சொந்தம் என்று சொல்லும் வீரமணியை மக்கள் மத்தி யில் அடையாளப்படுத்தும் நோக்கில் செ. குமரன், வீரமணி வேடம் போட்டு ஒரு கையில் பெரியார் நூல் களும், மற்றொரு கையில் ரூபாய் நோட்டு மூட்டை களை பிடித்துக் கொண்டு இருந்தது பொது மக்களை வெகுவாக கவர்ந்தது. கோபி அவர்கள் பெரியார் வேடம் அணிந்து வந்தார். 5.30 மணி வரை ஆர்ப் பாட்டம் எழுச்சியுடன் நடந்தது. (தோழர்கள் தியாகு, வாலாசா வல்லவன் கண்டன உரை அடுத்த இதழில்)

நெமிலி

வேலூர் மாவட்டம் நெமிலியில் பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணியளவில் கழகத் தோழர் பகலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கழகப் பொறுப்பாளர்கள் திலீபன், முருகேசன், கன்னியப்பன், முனியாண்டி, மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் மோகன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் பங்கேற்றனர்.

சேலம்


25.8.2008 திங்கள்கிழமை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் அ. சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எம். இராசகோபாலன், மாவட்ட செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, அரங்க செல்லதுரை, மாநில துணை செயலாளர், அரசியல் குழு விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அருள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகர பொறுப்புக் குழுத் தலைவர் எ°. முருகேசன், குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் பொதுச் செயலாளர் அரிபாபு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த ஆனையப்பன், மனித உரிமை அமைப்பைச் சார்ந்த பூமொழி, புதியன பண்பாட்டுக் கழகம் செந்தில், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன் மற்றும் கழக முன்னணி தோழர்களும், பெரியாரின் நூல்களை நாட்டுமையாக்கவும், பெரியாரின் ‘குடிஅரசு’ ஏடுகளை பெரியார் திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் வெளியிட இருக்கின்ற இந்த சூழ்நிலையில் கி.வீரமணி நூல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டு வதும் பிற்போக்குத்தனமானது என்றும், அறிவுசார் சொத்துரிமை கூறுவது கண்டனத்துக்குரியது என்றும் பேசினர். மேலும் பெரியார் மக்களுக்கான

தலைவர் அவருடைய ‘குடிஅரசு’ இதழை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் முயற்சிகளுக்கு நாங்களும், எங்கள் அமைப்பும் உறுதுணையாக இருப்போம் என்று உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் திற்கு கழகத்தின் செயற் குழு உறுப்பினர் தோழர் டேவிட் நன்றி கூறினார்.

திருப்பூர்

திருப்பூரில் மாநகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கழக செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை தாங்கினார். ஆதித் தமிழ்ப் பேரவையின் இளைஞரணி செயலாளர் நீலவேந்தன், பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரைசாமி, தென் மொழி துரையரசனார், அகிலன், முகில் ராசு, சரவணமூர்த்தி, பல்லடம், விஜயன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த் தினர். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் நூற்றுக் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.

தர்மபுரி

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 25.8.08 அன்று பகல் 12 மணிக்கு தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முனி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கணேசன், நஞ்சப்பன், அ. அம்பிகா, மிசா சின்னசாமி, மதிவாணன், சின்ன சாமி, மாது, பரமசிவம், கிருஷ்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

கோவை

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 25.8.08 மாலை 4 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர்
கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கி னார். இரா. அதியமான் (நிறுவன தலை வர், ஆதித் தமிழர் பேரவை), அனுபவ் ரவி (மாநகர செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி), சுசி. கலை யரசன் (மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள்), வெ. ஆறுச்சாமி (செயற் குழு உறுப்பினர், பெரியார் தி.க.), ரவிக்குமார் (ஆதித் தமிழர் விடுதலை முன்னணி), ஆதித் தமிழர் மாணவர் பேரவை செயலாளர் வெண் மணி, புரட்சிகர மாணவர் முன்னணி முகிலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (லிபரேசன்) தாமோதரன் ஆகியோர் கண்ட உரை நிகழ்த்தினர்.

மாநகர தலைவர் ம.ரே.ராசக்குமார், மேட்டுப்பாளையம் பா. இராம சந்திரன், அலுவலக பொறுப்பாளர் சா. கதிரவன், மாநகர அமைப்பாளர் இ.மு. சாஜித், தமிழ்நாடு மாணவர் கழகம் அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தோழமை இயக்கங்கள் சார்பில் 25.8.08 திங்கள் மாலை 4 மணி யளவில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில், மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்ட அமைப்பாளர் வெ. குமரகுருபரன், மாநகர செயலாளர் லெமூரியன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பைச் சார்ந்த  100-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ‘வீரமணி’ அவர்களின் ஆதிக்க மனப்பான்மையை யும், அதிகாரத் திமிரையும், ஆணவப் போக்கினையும் அனைவரும் தோலுரித் துக் காட்டினர். பெரியாரின் அனைத்து நூல்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று அனைத்து தோழமை இயக்கங்களும் வலியுறுத்தின. பெரியார் அவர்கள் “காற்றை” போன்றவர். அந்த காற்றை எந்தப் பெட்டிக்குள்ளும், எந்த திடலுக்குள்ளும் அடைத்து வைக்க முடியாது. உலக மனித குலம் முழுமைக்கும் பெரியார் என்ற மூச்சுக் காற்று - பொது வானது. தனிப்பட்ட எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அடக்கு முறை யும், ஆதிக்கமும் பாதிப்பும் எங்கெல்லாம், யாருக்கெல்லாம் வருகின்றதோ, அங்கெல் லாம் பெரியார் என்ற “மாமருந்து” தேவைப்படுகிறது என்று உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் - இரவி (புரட்சிகர தொழிலாளர் முன்னணி), துரை (ஆதித் தமிழர் விடுதலை முன்னணி), விநாயக மூர்த்தி (மாநகர செயலாளர் விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் கி. சிதம்பரம் (பி.யூ.சி.எல்.), புலி பாண்டியன் (மாவட்ட அமைப்பாளர் - சாதி ஒழிப்பு பொது வுடமை முன்னணி), ச.சுர. மணிபாரதி (பொதுக்குழு உறுப்பினர், தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி), மு. மோகன்ராசு (மாவட்ட செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), கா.சு.வேலுச் சாமி (மாவட்ட துணைத்தலைவர், பெரியார் தி.க.), வழக்கறிஞர் பாவேந்தன் (தமிழக மக்கள் உரிமைக் கழகம்), இராம கிருட்டிணன் (மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ம.தி.மு.க.), வழக்கறிஞர் ப.பா.மோகன் (இந்திய கம்யூனி°ட் கட்சி) ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, இறுதியாக இராம. இளங் கோவன் கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்ட முடிவில் ஈரோடு நகர இளைஞரணி செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

திண்டுக்கல்

மாவட்ட கழகத்தின் சார்பில் திண்டுக்கல்லில் 25.8.08 அன்று மாலை 5 மணியளவில் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துரை. சம்பத் (மாவட்டத் தலைவர்) தலைமையில், க.சூ.இரவணா (மாவட்ட செயலாளர்) முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.முருகேசன் (நகர செயலாளர்), க. பொன்ராஜ் (பழநி நகர செயலாளர்), பழநி-சிவா, மகளிரணி சுமதி, செந்தமிழ்ச் செல்வன், க. பெரியார் நம்பி, ஒட்டன்சத்திரம் கழகப் பொறுப்பாளர் பாண்டியன், தமிழ்மன்னன், கோபி, ஆட்டோ சீனி, செம்பட்டி ஆல்பர்ட், வலையபட்டி நாகராஜ், முருகானந்தம் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். க. சுப்ரமணி (நகர தலைவர்) நன்றி கூறினார்.

உடுமலை

25.8.08 திங்கள் மாலை 4 மணியளவில் உடுமலை பேருந்து நிலையம் முன்பு கழகத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
உடுமலை நகர கழகத் தலைவர் யாழ். நடராசன், உடுமலை ஒன்றிய கழகச் செயலாளர் கோ. விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் கா. கரு மலையப்பன் தலைமையேற்றார். ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி யும், பெரியார் கொள்கைகளை முடக்க சதி செய்யும் வீரமணியைக் கண்டித்தும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஆதித் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் பெரியார் தாசன், உடுமலை தமிழ்ச் சங்கம் இல. அருட்செல்வன், கொங்கு மண்டல ஆய்வு மையம் இரா. இரவிக்குமார், புரட்சிப் புலிகள் மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்புச் செயலாளர் குணசேகரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உடுமலை ஒன்றியச் செயலாளர் இராசசேகரன், கழக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை வட்டாரச் செயலாளர் கே.சி. இராதா கிருட்டிணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


மேலும், மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சு.சிவானந்தம், ஒன்றிய பொருளாளர் கதிரவன், உடுமலை ஒன்றிய பொருளாளர் சு.அரிதாசு, கடத்தூர் கழகச் செயலாளர் அய்யப்பன், காரத் தொழவு அமைப்பாளர் மயில்சாமி, ஜோத்தம்பட்டி அமைப்பாளர் மா. மோகன், குமரலிங்கம் அமைப்பாளர் பீட்டர், சின்னவீரம்பட்டி கழகத் தலைவர் சு.தமிழவேந்தன் உள்ளிட்ட கழகத் தோழர்களுமாக 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உடுமலை நகர கழகச் செயலாளர்
இரா. பாக்கியநாதன் நன்றியுரையாற்றினார்.
 

கழகத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்கிறார், வீரமணி!

பெரியாரின் ‘குடிஅரசை’ வெளியிடுவதன் மூலம், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டதால், பெரியார் திராவிடர் கழகம், ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று, ‘ஆயுள் செயலாளர் கி.வீரமணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்,.

• அன்று 1933 இல் இதே ‘குடிஅரசில்’ இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற கட்டுரை எழுதியமைக்காக பெரியாருக்கு 9 மாத சிறையும், 300 ரூபாய் அபராதமும் விதித்தது, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி.


• குடிஅரசு அடக்குமுறைக்கு உள்ளானபோது ‘புரட்சி’ வார ஏட்டை பெரியார் தொடங்கினார். அப்போதும், இடையில் மூன்று முறை பத்திரிகை நிறுத்தப்பட்டு, 2 தடவை ஜாமீன் பணம் கட்டுமாறு  அன்றைய பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. இதனால் 5000 ரூபாய் வரை தனக்கு இழப்பு ஏற்பட்டது என்று எழுதினார் பெரியார்.

• அதே ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பெரியார் எழுதியதை மக்களிடையே கொண்டு செல்வதற்கு, இப்போது 15 லட்சம் இழப்பீடு கேட்கிறார், ‘ஆயுட்கால செயலாளர்’ கி.வீரமணி. அன்று - பிரிட்டிஷ் அடக்குமுறையை குடிஅரசு சந்தித்தது. இன்று - ‘ஆயுள் செயலாளர்’ கி.விரமணியின் அடக்குமுறை - ‘குடிஅரசு’ தொகுப்புகள் மீது பாய்கிறது!
இவர்கள் தான் தமிழர் தலைவர்களா?
இவர்கள் தான் பெரியாரின் வாரிசுகளா?
பெரியார் கொள்கைகளுக்காக இன்னும் வீரமணியை நம்பிக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தோழர்களே!
இதுதான் பெரியாரைப் பரப்பும் பணியா? - மனசாட்சியை அடகு வைக்காமல் சிந்தித்துப் பாருங்கள்!

இதற்குப் பெயர் என்ன?

தந்தை பெரியாரின் வரலாற்றை விவரிக்கும் - தந்தை பெரியாரின் ஒப்புதலோடு வந்த நூல் ‘தமிழர் தலைவர்’. இதன் முதல் பதிப்பை வெளியிட்டது ‘தமிழ் நூல் நிலையம்’; இது மறைந்த குத்தூசி குருசாமி அவர்களின் பதிப்பு நிறுவனம்; பதிப்பகத்தின் முகவரியாகக் கூட குத்தூசி குருசாமி அவர்களின் இல்ல முகவரிதான் அச்சிடப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 1939 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ‘உரிமை வெளியிடுவோருக்கே’  என்றும் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது.
இதை அப்படியே ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்’ என்ற பெயரில் 10 பதிப்புகளுக்கு மேல் வெளியிட்டு விட்டார்கள். பெரியார் நூல்களுக்கு அறிவுசார் சொத்துடைமை கோரும் கி.வீரமணி, தமிழ் நூல் நிலையத்தின் பதிப்பை, சுயமரியாதைப் பிரச்சார நிறுவன பதிப்பாக வெளியிட்டது அறிவு நாணயமா?

தங்களிடமுள்ள பெரியார் எழுத்து பேச்சுகளை திருடிக் கொண்டு போனதாக பெரியார் திராவிடர் கழகத்தின் மீது நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு மனுவில் கி.வீரமணி கூறுகிறார்: அதாவது, ‘சேப்டி லாக்கரில்’ (ளுயகநவல டுடிஉமநச) தான் பத்திரமாக பூட்டி வைத்திருந்த பெரியார் கொள்கைகளைத் திருடிப் போய் - நாட்டு மக்களிடம் பரப்பும் திருடர்களைப் பிடியுங்கள் என்று சட்டத்தை நோக்கி ஓடுகிறார்! இருக்கட்டும்; ‘தமிழ் நூல் நிலையத்தின்’ வெளியீட்டை வீரமணி திருடலாமா? இது ‘மானமிகு’ திருட்டா? பதிப்பு மேல் பதிப்புப் போட்டு விற்பனை செய்யலாமா?
குத்தூசி குருசாமி குடும்பத்தார் இதற்காக சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் மீது ‘அறிவுசார் சொத்துடைமை கோரி’ வழக்கு தொடர்ந்திருக்க முடியும். பெரியார் கொள்கை பரவட்டுமே என்ற கொள்கை உணர்வும், பெருந்தன்மையும் அவர்களுக்கு இருந்தது.

‘வீராங்கனை’ விசுவாசிகள், ஆனூராரைக் குறை கூறுவதா?
‘குடி அரசு’ பிரச்சினையில், முகமூடி கிழித் தெறியப்பட்டு, மக்கள் மன்றத்தில், கேவலப்பட்டுக் கிடக்கும் ‘ஆயுள் செயலாளரை’ எவ்வளவு பெரிய ‘பேனா - விற்பன்னர்கள்’ வந்தாலும், இனி காப்பாற்ற முடியாது. ‘விடுதலை’யில் ‘உப்பு சப்பில்லாத’ சொத்தைக் கருத்துகளே - வாதங்கள் என்ற பெயரில் முன் வைக்கப்படுகின்றன.  அவர்களின் நிலை மிக மிக பரிதாபகரமாகிவிட்டது என்பதற்கு தரம் தாழ்ந்த எழுத்துக்களே சாட்சியங்களாக நிற்கின்றன.


ஒரு அரசியல் கட்சியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, அமைச்சர் பதவியையும் வகித்து, ஒரு கட்டத்தில், இந்தப் பதவி அரசியலே வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு, கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு, பெரியார் தொண்டராக மாறிய பெருமைக்குரிய அதிசய மனிதர் ஆனூர் ஜெகதீசன்!

சமுதாய இயக்கத்தில் இருந்து கொண்டே அரசியல்வாதிகளை மிஞ்சுமளவுக்கு ‘பந்தா’ காட்டும் “அடையாறு ஆலமரங்கள்” உலாவரும் தமிழகத்தில், அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டு, பெரியார் கொள்கைகளைப் பரப்ப தம்மை ஒப்படைத்துக் கொண்ட நேர்மையின் சின்னம், ஆனூர் ஜெகதீசன்! அவர் வீரமணியை ‘அவன் - இவன்’ என்று பேசியதாக கூச்சநாச்சமின்றி ‘பொய்களை’ பரப்புகிறது, ‘விடுதலை’. பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, குறுக்கு வழிகளில் தனது தொண்டர்களைத் ‘தட்டி எழுப்பி’ எழுந்து நிற்க வைக்க முயற்சி செய்கிறார்கள். “ஒரு சினிமா நடிகரை புரட்சித்தலைவர் என்று அவர் பினனால் சுற்றித் திரிந்தவர்” என்றும், ‘ஜீவன்’ என்றும், கழுத்தில் செயின் போட்டிருக்கிறார் என்றும், கீழ்த்தரமாக எழுதுகிறார்கள். ஆனூராரை இழிவுபடுத்துவதற்காக எம்.ஜி.ஆரையும் சேர்த்து இழிவுபடுத்துகிறார்கள். அப்படி சினிமா நடிகரை ‘புரட்சித் தலைவர்’ என்று கூறியவரை, தலைமைக் கழக செயலாளர் பதவியில் அமர வைத்தது யார்? இவர்கள் தானே? அப்போது - இவர்களின் ‘சிந்தனை’ எங்கே போனது? பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்த போதும், பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை அரசு ஏற்கும் என்று அறிவித்த போதும், அன்று - எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடத்தியது, இதே திராவிடர் கழகம் தானே! அப்போது பாராட்டு மழையில் குளிப்பாட்டிய எம்.ஜி.ஆர்., இப்போது - அவர்களுக்கு ஒரு சாதாரண சினிமா நடிகராகிவிட்டார். இருக்கட்டும்; ஆனூர் ஜெகதீசனாவது எம்.ஜி. ஆரை புரட்சித் தவைலர் என்று ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி யாகவோ’, ‘சமூகநீதிகாத்த வீராங்கனையாகவோ’ திராவிடர் கழகம் தூக்கிப் பிடித்தபோது தனது வாயால் கூற முடியாது என்று தன்மானத்துடன், உறதியாக நின்று காட்டினார். எம்.ஜி.ஆரையே சினிமா நடிகர் என்று எழுதும் மின்சாரங்கள், ஜெயலலிதாவை ‘சமூகநீதிகாத்த வீராங்கனை’ களாக்கியதற்கு என்ன பதிலை கூறுவார்களாம்?


இன்றைக்கு அதிகாரத்தில் கலைஞர் இருக்கிறார் என்பதால், இப்போது எம்.ஜி.ஆர். சினிமா நடிகர் என்று கேவலப்படுத்தப்படுகிறார். அன்று எம்.ஜி.ஆர். அதிகாரத்தில் இருந்தபோது, இவர்கள் கலைஞரைக் கேவலப்படுத்தியவர்கள் தான் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.
“வீரமணி ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுக் கட்டும்; அவரது ‘கட் அவுட்டுக்கு’ வேண்டுமானா லும் முண்டு கொடுக்கட்டும்” என்று, அன்று கலைஞரே, வெளிப்படையாக பேசும் அளவுக்கு, இவர்களின் ‘வீராங்கனை’ விசுவாசம், படு தீவிரமாக இருந்ததையும், மக்கள் மறக்கவில்லை.
ஆட்சிகள் மாறும் போதெல்லாம் புதிய புதிய அரிதாரங்களைப் போட்டுக் கொண்டு, வேடம் கட்டி ஆடும், இவர்களைவிட, தலைவரின் “தாறுமாறு களுக்கு” பின்னால், பேனாவைத் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பவர்களைவிட, அரசியலையே தூக்கியெறிந்துவிட்டு, பெரியார் கொள்கையாளராக நெஞ்சுயர்த்தி, ஒரே லட்சியத்தை உறுதியாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆனூர் ஜெகதீசன், கம்பீரமாகவே உயர்ந்து நிற்கிறார்.
ஏன், கி. வீரமணி கூட “ஈழத்திலே கருணா என்பவன்; இங்கே சில அனாமதேயங்கள்” என்று பேசியிருப்பது, அவர்களின் விடுதலையிலே வந்திருக்கிறதே. (ஆக.26) இது என்ன உலகத்தரம் வாய்ந்த பேச்சா? 

- விடுதலை இராசேந்திரன்

 

நீங்களும் செய்ய மாட்டீர்கள்; மற்றவர்களையும் செய்ய விட மாட்டீர்களா? கி.வீரமணிக்கு  ‘தமிழச்சி’ நேரடி கடிதம்


பிரஞ்சு நாட்டில் - பாரீஸ் நகரத்தைச் சார்ந்த பெரியாரிய  பெண் - ‘தமிழச்சி’; தனது இணைய தளங்களின் வழியாக 6000த்துக்கும் அதிகமான பெரியார் கட்டுரைகளையும் வெளியிட்டு, உலகம் முழுதும் பெரியாரியலைப் பரப்பிய சாதனையாளர். பாரிசில் தமிழர்களின் மூடநம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, அதன் காரணமாக கடும் எதிர்ப்புகளை சந்தித்தாலும், துணிவோடு போராடிக் கொண்டிருப்பவர். பாரிசில், தமிழர்கள் நடத்திய ‘விநாயகர் சதுர்த்தி’ கொண்டாட் டங்களுக்கு எதிராக பிள்ளையார் ஆபாசங்களை அச்சிட்டு, நேரடியாக துண்டறிக்கைகளை வழங்கியவர். இவ்வாண்டு - பிள்ளையார் விழா கொண்டாட்டங்களுக்கு, எதிராக பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை ஆணைப் பெற்றுள்ளவர். பாரீஸ் நகரத்தில் பெரியார் கொள்கைகளுக்காக உயிரையே பணயம் வைத்துப் போராடும், இந்த பெண் போராளி - திராவிடர் கழகத்துடனும், அதன் தலைமையிடமும் தொடர்பு கொண்டு செயல்பட்டவர். திராவிடர் கழகத்தின் ‘விடுதலை’ ஏடும், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளராக அறிவித்து, முதல் பக்கத்திலேயே அவரது படத்துடன், பெரிய தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டது. அதே தமிழச்சி தனது இணையதளத்தில் - ‘தோழர் கி. வீரமணி அவர்களுக்கு’ பகிரங்கமாக கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்:


பாரீஸ் நகரத்துப் பெரியாரியப் போராளிப் பெண் அநீதிகளை எதிர்த்து, ஆவேசத்துடன் கொதிப்பதை அவரது எழுத்துக்களைப் படிப்போர் உணர முடியும்.

தோழர் கி.வீரமணி அவர்களுக்கு, அவரது கடிதம். “பெரியார் டைப்பி°ட்” தமிழச்சி எழுதிக் கொள்வது,

தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துக்கள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்துனையும் அவர்களால் 1935 இல் உருவாக்கப் பட்டு, 1952 இல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும். இவைகளை அச்சில் வெளியிட்டு விளம்பரமும், வருவாயும் தேட தனிப்பட்ட சிலரும், சில இயக்கங்களும், பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரிய வருகிறது! அப்படிச் செய்வதுசட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்ற உங்களின் அறிவிப்பை விடுதலையில் காண நேர்ந்தது. அறிவிப்பு குறித்து விமர்சிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்...

தந்தை பெரியாரின் எழுத்துக்களை நான் இணையத்தில் பதிவு செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் வாழ்த்துக்களுடன் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தீர்கள். அதன் பின் இணையத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யும் உரிமையையும் எனக்கு தந்தீர்கள். பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா என்ற அமைப்பை பிரான்° நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஏற்படுத்தியபோது உலக மயமாகும் பெரியார் என்று பூரித்து போய் “விடுதலை”யில் செய்தி போட்டீர்கள். உங்களுடன் தொலைபேசியில் பேசியபோது பெரியார் எழுத்துக்களை நாட்டு உடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததற்கு அதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள்.

மற்றொரு முறை சில பேச்சுக்கள் வந்த போது, தோழர் கொளத்தூர் மணி அவர்களும், நீங்களும் என்னைப் பொறுத்த வரையில் ஒன்றுதான் என்று சொன்னதற்கு, கழகத்தில் இருந்து வெளியேற்றியவர் களுடன் எல்லாம் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றீர்கள். மற்றொரு முறை இணையத்தில் பெரியார் கருத்துக்களை பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கும்படி சொன் னதற்கு அதெல்லாம் ஏற் கனவே செய்தாகிவிட்டது. உங்களைவிட அதிகமாக இருக்கிறது என்று 35 கட்டுரைகளை 3500 கட்டுரை களுடன் இணைத்து பேசினீர்கள்.

சமீபத்தில் இணைய வானொலி “பெரியார் குரல்” ஆரம்பிக்கப்பட்டபோது தந்தை பெரியார் குறித்த ஒலி நாடாக்கள் கேட்டதற்கு உங்கள் புகழ் பாடும் ஒலிநாடாக்களே அதிகமாக வந்து சேர்ந்தது. இணைய வானொலியில்  முதல் நாள் ஆன் செய்தபோது, “கடலூர் வீரமணி” குறித்த பாடல் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போய் உடனே பாடலை நிறுத்தச் சொன்னேன். “தோழரே! வீரமணியார் புகழ் பாட தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். நம்ப குறிக்கோள் தந்தை பெரியாரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்பதுதான். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒலி நாடாக்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்றேன். எங்கே, எப்போது சந்தடி சாக்கில் உங்கள் புகழை பரப்ப முடியுமோ அங்கேயெல்லாம் புகுந்து வீரமணி புகழ் பாட வைத்து விடுகிறீர்களே! அப்போதே உங்களை பற்றிய மதிப்பு குறைந்து போய்விட்டது. (அதற்கு முன்பும் நல்ல அபிப்பிராயம் இல்லை) என் அனுபவத்தில் உங்களுடன் பேசியதில் உங்களிடம் செயல் திட்டங்களுக்கான எந்த அறிகுறியும் கிடையாது என்பதை உணர்ந்து கொண்டேன்.

கேள்விகள் கேட்பதற்கு நிறைய இருக்கின்றன. இப்படியெல்லாம் கேள்விகளை கேட்க ஆரம்பித் தால் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்? நான் இனி என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்று மிக தெளிவாகவே அறிந்து இருக்கின்றேன். இருப்பினும் சக தோழர்களை இழிவாக நினைக்கும் உங்கள் சிந்தனை என்னை கேள்வி கேட்க தூண்டுகிறது! எனக்கு கிடைத்த அங்கீகாரம் ஏன் அவர்களுக்கில்லை? சக தோழர்களுக்கு உங்களிடம் இருக்கும் ‘வயிற்றெரிச்சல்’ கொஞ்சம் நாகரிகமாக சொல்லப் போனால் ‘காழ்ப்புணர்வு’க்கு ஒரு அளவில்லையா?
தந்தை பெரியார் விட்டுச் சென்ற கோடிக் கணக்கான சொத்துக்களை வைத்து நீங்களும் எதுவும் செய்ய மாட்டீர்கள். மற்றவர்களையும் எதையும் செய்ய விட மாட்டீர்கள் என்றால் திராவிடர் கழகத்திற்குள் சிறை வைத்திருக்கும் எங்கள் பெரியாரை முதலில் உங்களிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும்.

தோழர் கொளத்தூர் மணி  தந்தை பெரியாரின் எழுத்துக்களை முன்னெடுத்து செல்லும் பணியில் எதை எதை அடமானம் வைத்து செயல்படுகிறார் என்று தெரிந்திருந்தும், வியாபார நோக்கத்திற்காக வும், வருவாய் ஈட்டவும் செயல்படுவதாக எப்படி அவர்களுடைய உணர்வுகளை ஒரு கருப்புச் சட்டைக்காரனாக இருந்து இவ்வளவு கேவலமாக விளித்து பேச முடிகிறது உங்களால்? அவர்கள் வியாபார நோக்கத்துடன் செயல்படுவதாக இருந்தால் புத்தகத்தில் பணத்&#