Header
dravidar - periyar - home dravidar - periyar - articles dravidar - periyar - photo gallery   dravidar - periyar - links dravidar - periyar - contactus
dravidar - periyar - tamilnadu
dravidar - periyar - news dravidar - periyar - pdk dravidar - periyar - periyar mulakkam dravidar - periyar - marriage without caste dravidar - periyar - ebooks dravidar - periyar - audiovideo
 
leftside
 
 
 

வெளிவந்துவிட்டது விடுதலை க. ராசேந்திரனின்
ஈழப் பிரச்சனையில்
 இந்திய உளவு நிறுவனங்களின் சதி-

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் நூல்

இந்நூலில்

அந்த மர்ம மனிதர் (எம்.கே. நாராயணன்)
தி.மு.க. ஆட்சிக் கவிழ்ப்பில் உளவுத் துறையின் பங்கு
ராஜீவை இயக்கிய உளவுத் துறை
மாலத் தீவில் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி
பாண்டிபசார் மோதலில் உளவுத்துறையின் சதி!
பிரபாகரன் சந்தித்த மரணங்கள்
டாக்டர் ரஜினி மரணத்தின் பின்னணி
சகோதர யுத்தத்தைத் தொடங்கி வைத்த றோ
உளவுத் துறை உருவாக்கிய கருணா குழு
றோ - சில தகவல்கள்
இந்திய உளவு அமைப்பு
மீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் நாடகம்
இலங்கைக்கு உளவு பார்த்த "றோ" அதிகாரி
ஜெயின் ஆணைய அறிக்கை

ஆகிய தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

நூல் வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்

நூலிலிருந்து ஒரு பகுதி:

1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் பாண்டிபசாரில் இரவு 9.45 மணிக்கு, ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஈழ விடுதலைக்கான போராளிக் குழுக்கள் எதுவுமே வளர்ச்சிப் பெறாத காலம். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பிரபாகரன், இராகவன் ஆகியோரும், புளோட் அமைப்பைச் சார்ந்த உமாமகேசுவரனும், நேருக்கு நேர் சந்தித்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். உமாமகேசுவரன் காயமடைந்தார். பிரபாகரனும், சிவக்குமாரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில நாட்களில் உமா மகேசுவரனும் கைது செய்யப்பட்டார். தமிழ் நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவின் பேரில் அன்றைய காவல்துறை தலைமை இயக்குநர் மோகன்தாகு உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டார். அப்போது இந்திய உளவுத் துறையில் கூடுதல் இயக்குனராக இருந்தவர் எம்.கே.நாராயணன். சென்னை யில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே டெல்லியிலிருந்து சென்னைக்கு பறந்து வந்தார் எம்.கே.நாராயணன். காவல்துறை இயக்குனர் மோகன்தாசை சந்தித்து - பிரபாகரன், உமாமகேசுவரன் மீது நட வடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டா தீர்கள்; நடவடிக்கைகளைத் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் சந்தித்து, இதையே வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் எம்.ஜி.ஆரோ, இது எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை. இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று நேருக்கு நேராக கண்டிப்பாகக் கூறிவிட்டார். ராஜிவ் கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணைய விசாரணையின் போது காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அளித்த வாக்குமூலத்தில் (2.1.1996) இதைப் பதிவு செய்துள்ளார்.

பிரபாகரன், உமா மகேசுவரனைப் பிடித்துக் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது. பிரபாகரனும், உமா மகேசுவரனும் சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், சிறீலங்காவின் காவல்துறை தலைமை அதிகாரி (அய்.ஜி.) ருத்ரா ராஜசிங்கம் உடனடியாக சென்னைக்கு பறந்து வந்தார். மத்திய அரசின் அனுமதியின்றி, இலங்கைக் காவல்துறை அதிகாரி தமிழ்நாடு வந்திருக்க முடியாது.

தமிழ்நாட்டில் அவர்களைக் கைது செய்து, காவலில் வைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டாம் என்று உளவுத் துறை அதிகாரி எம்.கே. நாராயணன், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய அவசியமென்ன? உடனடியாக - இலங்கை காவல்துறை தலைமை அதிகாரி, ஏன், தமிழகத்துக்கு வர வேண்டும்? இந்த நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உண்டு. கைது செய்யப்பட்ட பிரபாகரன், உமாமகேசுவரன் உட்பட நான்கு ஈழப் போராளிகளையும், தமிழ்நாட்டில் காவலில் வைக்காமல், சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்க, இந்திய உளவுத்துறை திட்டமிட்டதே இதற்குக் காரணம். இப்படி ஒரு சதி நடக்கிறது என்ற நிலையில், அன்று காமராசர் காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த பழ. நெடுமாறன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி யது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் பிரதிநிதியை எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை மரியாதையுடன் நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார். அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டமில்லை என்று காவல்துறை இயக்குநர் மோகன்தாகு அறிவித்தார். எதிர்கட்சியிலிருந்த கலைஞரும், போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் பேசிய தோடு, உடனடியாக பிரதமர் இந்திரா காந்திக்கு தனது தூதர் ஒருவரை அனுப்பி, உளவுத் துறையின் நாடு கடத்துமுயற்சிகளை நிறுத்தக் கூறினார். உளவுத் துறையின் சதித் திட்டம் தோல்வியில் முடிந்தது.

தொடர்பு முகவரி: periyarmulakkam@yahoo.com 

 
rightside

 

Footer - dravidar - periyar -
  Top    
 
Home | About EVR  | Services | Periyar Mulakam  | PDK | No Caste Matrimony | Audio-Video | News | Publications | PhotoGallery | Links | SiteMap | Contacts
Copyright 2007. Dravidar