ஆர்.எஸ்.எஸ் குரலை எதிரொலிக்கும் அகிலஉலக அறிவு ஜீவி - புதியவன்
எந்தத் தலைவனும், எந்தத் தத்துவமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பது
சரியே. பெரியாரியலும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதும் சரியே! விமர்சனங்கள் தான்
ஒரு தத்துவத்தையோ, தலைவனையோ, இயக்கத்தையோ, அமைப்பையோ நெறிப்படுத்தும் என்பதும்
சரியே. வளப்படுத்தும், செழுமைப்படுத்தும் என்பதும் உண்மையே! அதே வேளை
விமர்சனம் என்பது வேறு; அவதூறு என்பது வேறு; மதிப்பீடு என்பது வேறு; தூற்றுதல்
என்பது வேறு அதை விடவும் உண்மை.
வறட்டு நாத்திகர், வகுப்பு துவேஷி என்றெல்லாம் பெரியாரை தன் தோழர்களுக்கு
அடையாளம் காட்டி பயிற்றுவித்திருந்த பொதுவுடைமை இயக்கங்கள் இப்போதுதான்
பெரியாரின் தேவையை உணரத் தொடங்கியிருக்கின்றன. பெரியார் 125 அய் மார்க்சிய
பொதுவுடைமைக் கட்சியும், பிறந்தநாம் விழாக்களை இந்தியப் பொதுவுடைமைக்
கட்சியும் கொண்டாடத் தொடங்கியும் உள்ளன.
ஆனால் சில காலம் முன்பு வரை பெரியாரைப் போற்றிப் புகழ்ந்து, சில வேளைகளில்
நல்லெண்ணத்தோடு விமர்சனங்களை எழுதி வந்த இரவிக்குமார் போன்றவர்கம் திடீரென ''காலச்சுவட்டின்''
கால் சுவட்டில் நடைபயிலத் தொடங்கியுள்ளார்கள். ''தந்தை பெரியார்
திராவிடர்கழகத்தின் தொடக்க விழாவில் தன்னையும் அவ்வமைப்பின் உறுப்பினன் என்று
பெருமையோடு அறிவித்துக் கொண்ட தோழர் திருமாவளவனின் அதிகாரப்பூர்வ ஏடு ``தாய்மண்''
ஏற்பு வழங்குவது போல் (விவாதக்களம்,கட்டுரையாளர் கருத்து என்ற குறிப்பு கூட
இல்லாமல் ) அவரது கட்டுரைகளை வெளியிடுகிறது. அந்தக் காலத்து விபூதி வீரமுத்து,
கிருஷ்ணசாமிப் பாவலர் போன்றோரை விஞ்சும் வகையில் இரவிக்குமார், சிவகாமி
குழுவினர் பெரியார் ஒரு சிந்தனையாளரே அல்ல; பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு
மட்டுமே உழைத்தவர்; சிறுபான்மையினருக்கு எதிரி; பாலுணர்வு வக்கிரங்களின்
மூலக்காரணம் என்றெல்லாம் எழுதி வருகின்றனர்.
கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களைப்
பட்டுணரும் வாய்ப்பே இல்லாமல், நகர்ப்புறவாசிகளாக தலைமுறைகம் வாழ்ந்து விட்ட,
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மகளாக, ஒரு அய்.பி.எஸ். அதிகாரியின் சகோதரியாக,
தானே ஒரு அய்.ஏ.எஸ் .அதிகாரியாக உள்ள சிவகாமி போன்றோர் தங்கள் அதிகார
அகந்தையின் காரணமாக பெரிய அறிவாளியாகத் தங்களைத் தவறாகக் கருதிக் கொண்டு
பெரியாரைப் படித்தோ, கேட்டோ அறிந்து கொள்ள முயற்சிகூட மேற் கொள்ளாமல்,
பெரியாரை அவதுÖறாக எழுதுகின்றனர். இந்தப் போக்கைக் கூட `அறியாமை, பேதமை' என்று
சகித்துக் கொள்ள முடியும்.
ஆனால் பெரியாரை கேட்டு, படித்து, விவாதித்து நன்கு அறிந்து வைத்துள்ள
ரவிக்குமார் போன்றோர் தன்னை `தலித்' என்று அடையாளப் படுத்திக் கொண்டு `தாய்மண்'
இதழிலும், அறிவுரைப் போல் காட்டிக் கொண்டு, அறிவை வளர்ப்பது போல் நடித்துக்
கொண்டு படிப்பவர் நெஞ்சில் மெல்ல மெல்ல பார்ப்பன நஞ்சை நளினமாக செலுத்தும்
வல்லமை மிக்க `கண்ணனின்' `காலச்சுவட்டில்' நாக்கில் நீர் வடிய, வீசப்
படுபவற்றின் சுவைக்காக எழுதிக் கொண்டு வரும் போக்கு தான் `அயோக்கியத்தனமாக'
உள்ளது. அதிலும் ஆர்.எஸ்.எஸ் மாணவர்பெயரில் சேலம் அரசினர் கலைக்கல்லுÖரி ஆண்டு
மலரிலும், தலித் அறிவு ஜீவி இரவிக்குமார் காலச் சுவட்டிலும் ஒரே மேற்கோளை
எடுத்துக்காட்டி எழுதி பெரியாரை வலிந்து கொச்சைப்படுத்தும் கட்டுரைகளை ஏக
காலத்தில் எழுதியிருப்பது தற்செயலாக நிகழ்ந்தது போல் தெரியவில்லை.
அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவரின் பெயரில் சேலம் அரசு
கல்லுÖரி மலரில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் பெரியாரின் பக்தி என்பது தனிச்
சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து; பக்தி இல்லாவிட்டால் ஒன்றும்
நட்டமில்லை; ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாம் பாழ் என்ற வரிகளை
எடுத்துக்காட்டி, பக்தி தான் முக்கியம் என்று கூற வந்தவர் பெரியாரின் மைனர்
வாழ்க்கையை சாமி. சிதம்பரனாரின் தமிழர் தலைவர் ŽÖலிலிருந்து எடுத்துக்
காட்டியும், பொதுவுடைமைக் கட்சியினர் பொது இடங்களில் குப், குப் என்று
புகைத்து கட்சியையும் , சிகரெட்டையும் இரண்டு கண்களாக பாவிப்பதாக சுட்டி -
ஞான சம்பந்தரின் தேவாரத்திலும், பெரிய புராணத்தின் திருநீல கண்டரிலும் காணக்
கிடக்கும் ஒழுக்கத்தை விதந்தோதியும் தன் வாதங்களை நிலை நாட்ட முயல்கிறார் .
ஏபிவிபி மாணவர் கட்டுரையிலும், இரவிக்குமார் கட்டுரையிலும்
காட்டப்பட்டும்ள மேற்கோளில் அவர்களாலேயே மறைக்க முடியாமல் `பொது வாழ்வில்
ஈடுபடுவதற்கு முன்'பெரியார் பெரிய மைனராக விளங்கினார் என்ற சொற்களை ஏன்
படிக்கவில்லை என்பது தெரியவில்லை. அவர்கள் இனி மேல், காசிக்குப் போய் மொட்டை
அடித்துக் கொண்டு, எச்சில் சோற்றைத் தின்று கொண்டு துறவியாக வாழ்ந்ததை மறைத்து
விட்டு,பெரியாரை நாத்திகர் என்று கூறுவது தவறு என்று எழுதுவார்களா என்பதும்
தெரியவில்லை. அல்லது அதற்கு முன் பிள்ளைப் பருவத்தில் குடுமியோடு இருந்தவர்
எப்படி பார்ப்பன குடுமி களைப் பற்றிப் பேசலாம் என்று வாதம் வைப்பார்களோ
என்பதும் தெரியவில்லை.
அல்லது அதற்கு முன் குழந்தைப் பருவத்தில் ஆடையில்லாமல், அம்மணமாக திரிந்த
பெரியாரின் இளமைக் காலத்தைத் திட்டமிட்டு மறைத்துவிட்டு ஆடை அணிந்த மனிதராக
பெரியாரின் புகைப்படங்களை வெளியிடும் புரட்டுகளைச் சகட்டுமேனிக்கு விமரிசித்து
எழுதுவார்களோ என்பதுவும் தெரியவில்லை.
தன் அப்பா சாகக் கிடக்கும் போது மனைவியுடன் சல்லாபித்துக்
கொண்டிருந்த மகாத்மா காந்தியின் தலை கூட உருட்டப்படலாம். பக்தியே ஒழுக்கத்தை
தரும் என்று இவர்கள் கூறும்போது நமக்கும் சில செய்திகள் நினைவுக்கு வந்து
தொலைக்கின்றன.
லண்டன் பி.பி.சி தொலைக்காட்சியின் புலனாய்வு செய்திப்
பிரிவு அமெரிக்காவின் ஆக்சோன்ஸோ மாநிலத்திலுள்ள ஒரு சாய்பாபா தொண்டமைப்பின்
நிறுவனர்களான ஆல்லம், மரியாராம் தம்பதியரின் மகன் அலயாராம் 1990 இல்
புட்டபர்த்தி சாய்பாபாவை தரிசிக்க சென்றபோது அவனை தனி அறைக்கு அழைத்துச்
சென்று ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகவும், அதை அவ்விளைஞன் தன் தகப்பனாரிடம்
அப்போது கூறிய போது தானும் 18 வயது இளைஞனாக சாய்பாபாவை சந்திக்க சென்றபோது இதே
போன்ற அனுபவம் ஏற்பட்டதாகவும், இதை சாய்பாபா ஒரு ``ஆன்மீக நிவாரண முறை'' என்று
கூறியதாகவும், மற்ற சாய்பக்தர்களைப் போல் தானும் அதை நம்பியதாகவும் கூறியது
ஒளிபரப்பப்பட்டது . சுவீடனைச் சார்ந்த ஒரு சிறுவனிடம் இதே போன்று சாய்பாபா
நடந்ததாக தெரிந்தவுடன் அங்கும்ள சாய் அறக்கட்டளை இழுத்து மூடப்பட்து . மேலும்
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத் தின் இணைய தளம் சாய்பாபாவை தரிசிக்கச்
செல்லும் அமெரிக்கர்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
இதே `ஆன்மிக நிவாரண முறையை'க் காந்தியைச் சுட்டுக் கொன்ற
நாதுராம் விநாயகம் கோட்சேவுக்கு, நாடாளுமன்றத்தில் படத்திறப்பு
செய்யப்பட்டுள்ள இந்துத்துவ சிற்பி வீரசவர்க்கார் வழங்கி வந்ததை (பொது
வாழ்க்கைக்கு வந்த பின்னர் தான்) நள்ளிரவில் சுதந்திரம் போன்ற ŽÖல்கம்
எழுதியுள்ளதை வேறு நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
திருஞான சம்பந்தனின் `பேயெழில் சாக்கிய அமணர்தம் பெண்களைக் கற்பழிக்கத்
திருவுளமே'' என்று பாடிய தேவாரமும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
உற்றார் உறவினர் தடுத்தும், சிவபக்த பிராமணர் கேட்டவுடன்
தன் மனைவியை வழங்கி மகிழ்ந்த இயற்பகை நாயனார் வரலாறும், தாயைப் புணரத்
தடையாக வந்த தந்தையைக் கொன்றுவிட்டு, தாயைப் புணர்ந்த அவந்தி நாட்டு
பார்ப்பனனுக்கு மதுரை பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்தவுடன் சொர்க்கம்
வழங்கிய சிவபெருமானின் பெருமை கூறும் திருவிளையாடற் புராணத்தின் ``மாபாதகம்''தீர்த்த
படலமும், துவாரகையில் உள்ள எல்லா பெண்களும் கிருஷ்ணனோடு புணர்ந்து மகிழும்
வாய்ப்புள்ளபோது தங்கையாக பிறந்த பாவத்துக்காக தனக்கு மட்டும் அந்த வாய்ப்பு
கிடைக்கவில்லையே என்று ஏங்கி மருகிய தங்களை சுபத்திரையை, எவ்வித பாவமும்
அனுமதிக்கப்படும் ஜகந்நாதத்துக்கு வரச்சொல்லி புணர்ச்சி இன்பம் அளித்து,
அக்கோயிலின் வழிபடும் தெய்வங்களாக அண்ணனும் தங்கையுமே வைக்கப்பட்டிருக்கிற
பெருமை
களைக் கூறும் `ஜகந்நாத மகாத்மியமும்'', திருமணமாகாத இளைஞனையும்,
இளம்பெண்ணையும் யாக வேம்விக்கு மேலாக அமைக்கப்பட்டிருக்கும் பரணில் ஏற்றி
புணரச் செய்து அப்போது சிந்தும் விந்துத் துளிகளை ஓமகுண்டத்தில் விழச் செய்து
இறைவனை மகிழ்விக்கும் `பவுண்டரீக யாகமும்'', இறந்து போனவனின் உடலில் புகுந்து
கொண்டு, அவன் மனைவியுடன் வஞ்சகமாக ஓராண்டு உடலுறவு கொண்டு பெற்ற அனுபவங்களின்
தொகுப்பாக ஆதி சங்கரர் எழுதியதாகக் கூறப்படும்
``சவுந்தர்ய லஹரியும்'', ஒரு அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு
பத்தாயிரம் மந்திர செபம் செய்கிறவன் தேவகுருவக்கு சமமானவன் ஆவான் என்றும், சுடுகாட்டில்
அம்மணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது விந்தில்
தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் புக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரம்சொல்லி
தேவியைப் புசிக்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான் என்றும், அதர்வண
வேதத்தின் அடியொற்றி எழுதப்பட்ட `மந்த்ர மஹோததியில்'எழுதப்பட்டிருப்பதும்,
(ŽÖல்: ஞானசூரியன் - சுவாமி சிவானந்த சரஸ்வதி)- தாருகாவனத்து ரிஷி
பத்தினிகளிடம் செய்த சேட்டைகளுக்காக தன் ஆண்குறியை இழந்த சிவனின் பெருமைகளைக்
கூறும் சிவ புராணமும், அகலிகையிடம் வஞ்சக முறையில் கல்வி புரிந்தமைக்காக
உடலெல்லாம் பெண்குறிகளாக (கவுதம முனிவரால் சபிக்கப்)பெற்ற இந்திரனின் பெருமை
கூறும் புராணங்களும், பிரேமானந்தாவின் சாகசங்களும், காஞ்சி வரதராசப்
பெருமாம் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலையும், அதில் காஞ்சி சங்கராச்சாரிகளின்
தொடர்பூ பற்றி வந்திருக்கும் செய்திகளும், 1987 இல் ஒரு முறையும், அதற்கு
முன்பு ஒரு முறையும் துறவறத்தைத் துறந்து விட்டு சங்கராச்சாரி காஞ்சி
மடத்தைவிட்டு வெளியேறிய செய்திகளும், பெரியார் பல்கலைக் கழகத்தில்
வாஸ்துவுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பெரியார் சிலையை அப்பூறப்படுத்திய
த.பெ.தி.க போராட்டத்துக்குப் பின் நிறுவப்பட்டு விட்டது) பக்த சிரோன் மணியான
துணைவேந்தர் சேதுராமலிங்கம் மருமகளின் புகாரின் பேரில் உயர்நீதிமன்றத்தில்
நீதிபதி கற்பக விநாயகத்திடம் வாங்கிக்கட்டிக் கொண்ட பெருமைமிக்க
நிகழ்வுகளும்தான் பக்தி வழியாக வரும் ஒழுக்கத்துக்கு எடுத்துக் காட்டுகளாக
எங்கள் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது.
சரி, விடுவோம். தங்களை பெரியாருக்கு,பொதுவுடைமைக்கு , இசுலாமியருக்கு ,
எதிரியாக அடையாளம் காட்டிக் கொண்டு மீண்டும் வேதகால இந்தியாவைப் படைக்கத்
துடிக்கும் இந்துத்துவ சக்திகளின் திரிபூகளை, புரட்டுகளைப் புரிந்து கொள்ள
முடிகிறது. இரவிக்குமாருக்கு என்ன வந்தது? ஏன் இப்படி எழுதுகிறார்? எப்படி ஒரே
நேரத்தில் திருமாவளவனுக்கும், காலச்சுவடு கண்ணனுக்கும் உகந்ததாக இருக்க
முடிகிறது? இப்படி ஏராளமான கேள்விகள் எழத்தான் செய்கின்றன. சரி, செய்திக்கு
வருவோம்!
ஒரு மனிதனை ஒருவர் உருட்டுக் கட்டையால் அடிக்கிறார் ! ஒருவர் கத்தியால் மாறி
மாறி குத்துகிறார்! ஒருவர் துப்பாக்கியால் சுட்டு சல்லடையாகத் துளைக்கிறார்!
ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்! ஒருவர் தலையை நீருக்கும் அமுக்கிப்
பிடித்து மூச்சுத் திணர வைக்கிறார்! ஆனால் ஒவ்வொருவரும் அடுத்தவர் செய்வது
தவறு,குற்றம் என்று குறை கூறிக் கொண்டே தங்கள் வேலைகளைத் தொடர்கின்றனர் என்பது
போலவே தான் காலச் சுவட்டில் வெளி வந்துள்ள பெரியார் பற்றிய பெரும்பான்மைக்
கட்டுரைகளும் உள்ளன. மற்றவை பின்னர் - முதலில் இரவிக்குமார்!
அவர் கட்டுரை என்ன செய்திகளைத் தான் சொல்லுகிறது?
திருமணம் கிரிமனல் குற்றம் என்று பேசியவர் மணியம்மையை ஏதேதோ காரணங்களைச்
சொல்லி திருமணம் செய்து கொள்கிறார்!
சீதை வெட்கப்பட்டதாக வரும் இராமாயணக் குறிப்பின் மீது பெண்களின் இயற்கைக்
குணப்படி வெட்கப்பட்டதாக பெரியார் தன் கருத்தை ஏற்றிச் சொல்கிறார்.
பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகம் பெரிதும் அதிர்ச்சி மதிப்புக்காக
உதிர்க்கப்பட்டவை.
பெரியாரின் 1931 அயல் நாட்டுப் பயணத்தில் நிர்வாண சங்கங்களைப் பார்த்தது
அவரது மைனர் வாழ்க்கையின் காவிரியாற்றங்கரை திருவிளையாடல்கள் பற்றிய
ஞாபகங்களின் எச்சங்களே!
பெரியார் ஜெர்மனியில் இருந்த ஏழு நாட்களில் நான்கு நாட்களை நிர்வாண
சங்கங்களிலேயே கழித்தார்.
பெரியாரின் பெண்ணுரிமை குறித்த கருத்துகள் உண்மையாக இருந்திருந்தால் அவரது
சீடர்களின் வசனங்களிலிருந்து வாழ்க்கை வரை பாலுணர்வு சார்ந்த வக்கிரங்களாகவே
வெளி வந்திருக்காது.
பெண் விடுதலைக்கு பெரியாரை முன்னிறுத்துபவர்கம் பெண்களுக்கு மட்டுமல்ல,
ஒட்டுமொத்த சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறார்கள் என்று குற்றச் சாட்டுகளை
அடுக்குகிறார்.
திருமணம் கிரிமினல் குற்றம்.....பற்றி
இரவிக்குமார் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள்கள் 11.10.1967 விடுதலையில்
வெளியான ``திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று சொல்லி
வருகிறேன்''.
16.10.1967 விடுதலையில், ``வெளியான இந்த மாதிரி வாழ்க்கைத் துணை ஒப்பந்த
முறையைக் கூட கிரிமினல் குற்றம் ஆக்க வேண்டுமென்று இப்போது (89 ஆம் வயதில்)
நான் எடுத்துச் சொல்லிக்கெண்டு
வருகிறேன்''. இவற்றோடு கூட, பெண் விடுதலைக்கு இந்த கலியாண முறையை ஒழிக்க
வேண்டுமென 1.2.1973 இல் வெளியான விடுதலையிலும், மனிதன் பெண்களை திருமணம்
என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதை சட்டப்படியாக குற்றம் என்று செய்ய
வேண்டும் என்று 2.5.1973 விடுதலையில் வெளியான சொற்பொழிவிலும் உள்ளதை சுட்டிக்
காட்டிவிட்டு, இக்கருத்துகளுக்கு பெரியார் வந்தடைந்து வெளியிடுவதற்கு 18-24
ஆண்டுகளுக்கு முன்னாள் 1949 இல் நடந்த திருமணம் என்ற ஏற்பாட்டைச் சுட்டிக்
காட்டி குறை கண்டுபிடிக்கிறார்.
அதையும் விட 14.5.1933 -ல் நாகம்மாள் மறைவு நன்மைக்கே! என்ற அறிக்கையையும்,
28.3.1933-ல் தன் தாயார் இறந்த போது எழுதிய அறிக்கையையும் மேற்கோளாகப் போட்டு
விட்டு, திருமணம் என்பதையே தடை செய்ய வேண்டும் , கிரிமினல் குற்றம் ஆக்க
வேண்டும் என்று 1933 முதல் 1973 வரை பலமுறை பேசிய பெரியார் ... என்று நெஞ்சாற
பொய் ஒன்றைமிக இயல்பாக எழுதுகிறார் இரவிக்குமார். அடுத்து பெரியார்
ஜெர்மனியில் இருந்த ஏழு நாட்களில் நான்கு நாட்களை நிர்வாண சங்கங்களிலேயே
கழித்தார் .... நிர்வாண சங்கங்களை, நிர்வாண சினிமாக்களைப் பார்த்தது, அவரின்
மைனர் வாழ்க்கையின் காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்கம் பற்றிய ஞாபகங்களின்
எச்சங்களே!.... என்று எழுதுகிறார்.
தோழர் ஆனைமுத்து பதிப்பித்துள்ள பெரியாரின் அயல்நாட்டு பயணக்
குறிப்புகளிலிருந்து பெரியார் ஜெர்மனியில் தங்கியிருந்த போது 9.6.1932 முதல்
12.6.1932 வரையான நான்கு நாட்களில் நிர்வாண சங்கங்களுக்குப் போய்
பார்வையிட்டிருக்கிறார் என்பதுமட்டுமின்றி அக்குறிப்புகளின்படி பல்வேறு
இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கிறார் என்பதை அறியலாம் . 500 அடி டவர்,
100 பெண்கம் சேர்ந்து நடத்தும் டான்சு, பெரிய பேக்டரி போன்று நடந்த
கம்žனிஸ்டுகளின் அச்சகம், ஜப்பானின் கம்žனிஸ்ட் இளைஞர்களின் சந்திப்பு, அண்டர்
கிரவுண்ட், அந்தரத்து ரயில் என 4 அடுக்கு ரயில், பந்தல், லண்டனில் சந்திக்க
வேண்டிய நபர்களுக்கு நம்பியார் என்பவரைச் சந்தித்து சிபாரிசு கடிதம் பெறுதல்,
விக்டோரியா கார்டனில் நடந்த சாலிடாரிடி திருவிழாவிற்கு செல்லுதல், தோழர்களுடன்
புகைப்படங்கம் எடுத்து, முகவரிகம் பரிமாறி விடைபெறும் நிகழ்ச்சி என பல்வேறு
நிகழ்வுகளில் பங்கேற்றதை, இடங்களைப் பார்த்ததை எல்லாம் மறைத்து விட்டு ஏழு
நாட்களில் நான்கு நாட்களை நிர்வாண சங்கங்களிலேயே கழித்தார் என்று
குறிப்பிடுவதில் உள்ள விஷமத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் பார்வையிட்ட நிர்வாண சங்கங்களில் கூட, ஒரு நாம் பூர்ஷ்வா நிர்வாண
சங்கத்துக்கு போயுள்ளார். மற்றொரு நாம் அனார்க்கி, பாசிஸ்ட், சோஷியல்
டிமார்க்கரிட்ஸ், கம்žனிஸ்ட் ஆகிய பார்ட்டிகளைச் சார்ந்தவர்களின் நிர்வாண
சங்கத்துக்குப் போகிறார். சங்கத்தில் உறுப்பினராகிக் கலந்து கொண்டிருக்கிறார்,
தானும் நிர்வாணமாக இருந்து புகைப்படமும் எடுத்துள்ளார்.
இவற்றைக் கொண்டு பார்க்கும் போது,எதுவானாலும் அதை ஆழ்ந்து அறிய வேண்டும், பல
கோணங்களிலும் ஓர் நடவடிக்கையை ஆய்ந்தறிய வேண்டும் என்ற பெரியாரின் ஆர்வமே
நமக்கெல்லாம் தெரிகிறது. ஆனால் இரவிக்குமாருக்கோ 63 வயது பெரியாரின்
இச்செயல்கள், 20 வயதின் காவிரியாற்றங்கரை திருவிளையாடல்கள் பற்றிய ஞாபகங்களின்
எச்சங்களாக தெரிகிறது. கண்டதெல்லாம் மஞ்சளாகத் தெரிகிற தென்றால், தேவை காமாலை
நோய்க்கு வைத்தியம் தான்.!
சீதை வெட்கப்பட்டதாக வரும் இராமாயணக் குறிப்பின் மீது பெண்களின் இயற்கைக்
குணப்படி அவம் வெட்கப்பட்டதாக தன் கருத்தை எற்றிச் சொல்கிறார் (பெரியார்
சிந்தனைகம் வே ஆனைத்து -பக் 1452) என்பது மற்றொரு அவதூறு.
இராமாணப் பாத்திரங்களைப் பற்றி விமர்சிக்கும் பெரியார் சீதையைப் பற்றியும்
விமர்சிக்கிறார். அதற்கு ஆதாரமாக இரவிக்குமார் சுட்டிக்காட்டும் கட்டுரையில்
சி.ஆர்.சீனிவாச அய்யங்காரும், தாத்தா தேசிகாச்சாரியும் மொழி பெயத்த வால்மீகி
இராமாயண ஆரண்ய காண்டத்தின் ஒரு பகுதிக்கான மொழி பெயர்ப்பூகளைக் கூறி
அவ்வாதங்களின் அடிப்படையில் தனது புரிதலை எழுதுகிறார்.
சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு குறித்து:-
இராவணனைப் பார்த்து சீதை, `பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம்; இப்பொழுது
கிடைக்கும் சுகமே பெரிதென்று நினைக்கிறாயோ?' (பக் 171) என்று கேட்கிறாம்.
இதனால் இராவணன் சீதையிடம் சுகமனுபவித்து விட்டான்; ஆராய்ந்த பார்த்தால்
அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தை களைச் சீதை இராவணனிடம்
கூறுவது நன்கு விளங்கும்.
அதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில் `சீதே அக்னி சாட்சியாக உன் கையைப்
பிடித்த கணவனைக் கை விடுவது அதர்மமென் றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம்
இருவருக்கும் ஏற்பட்ட சம்பந்தம் தெய்வ கதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால்
ஒப்புக்கொள்ளப்பட்டது' என்று சமாதானம் கூறுகிறான் (சீதை வருத்தப்படுவதாகவோ,
ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை; வெட்கப்படுகிறாளாம். விருப்பம் இல்லா விட்டால்
வெட்கப்படுவது தான் ``விருப்பமில்லை' என்பதைக் காட்டும் அறிகுறி போலும்!
ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்)
ஆரண்ய காண்டம் 55 -வது சருக்கம் 678 வது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார்
மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது. ``இனி நாண முறற்க. இதனால்
தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை
நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும். இது ரிஷிகளாலும் உகக்கப்பட்டது''என்று
கூறப்படுகிறது.
`இனி நீ நாணமுறற்க'- இதன் படி என்னவென்றால் , இனிமேல் எதற்காக வெட்கப்பட
வேண்டும்? உனக்கும் தெய்வ கதியால் சேர்க்கை நேர்ந்து விட்டது என்கிறான்.
அதாவது காரியம் முடிந்துவிட்டது; இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற
கருத்தில் இராவணன் கூறுகிறான் . எனவே, இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை
இதன் படி உறுதிப்படுத்தலாம்.
என்ற பகுதிகளை இரவிக்குமார் கூறுகிற பெரியார் சிந்தனைகம்- வே.ஆனைமுத்து, பக்
1452-ல் எடுத்துக்காட்டி, இவ்விரண்டு மொழி பெயர்ப்புகளிலும் உள்ள செய்திகளைப்
பார்க்கும் போது, சீதையிடம் இராவணன் செய்த காமலீலைகளுக்கு அவள்
உடன்பட்டிருக்கிறாம் என்பதுவும், இருமொழிபெயர்ப்புகளிலும் `வெட்கப்படுகிறாயோ?'
`இனி நாணமுறற்க!' என்று சொற்களைப் பார்க்கும்போது சீதைக்கு இராவணனுடன்
நடந்தேறி விட்ட உடல் உறவில் உடன்பாடிருந்ததும் இவ்வெட்க, நாண உணர்வுகளைக்
காட்டியது பெண்களின் இயற்கை குணமாக கருதப்பட்டவற்றின் வெளிப்பாடு போலும் என்ற
கருத்துதான் புலப்படுகிறது என்ற பொருளில் எழுதப் பட்டுள்ளது அக்கட்டுரை. இதிலே
பெரியார் எங்கே தனது கருத்தை ஏற்றிச் சொல்லியிருக்கிறார்? இரவிக்குமார்களின்
திரிபுகள் நம்மை விளக்க வைக்கிறது.
பெரியாரின் பெண்ணுரிமை குறித்த கருத்துகள் உண்மையாக இருந்திருந்தால் அவர்களது
சீடர்களின் வசனங்களிலிருந்து வாழ்க்கை வரை- பாலுணர்வு சார்ந்த வக்கிரங்களாக
வந்திருக்காது...என்கிறார், இரவிக்குமார்.
இரவிக்குமாரின் ஆய்வு முறைப்படி ஒரு தலைவரின் கருத்துகள் உண்மையானதா
போலியானதா என்பதை ஆய்ந்தறிய அத்தலைவரின் பெயரைக் கூறிக் கொள்ளும் சீடர்கள்
என்பவர்களின் செயல்பாடுகள் தான் சோதனை முறையாக இருக்குமேயானால் உலகில் எந்தத்
தலைவரும் உண்மையானவராகத் தேற மாட்டார்.
மதுவருந்தும் காங்கிரஸ்காரன், இன்னமும் இந்துமதத்தில் தொடரும் அம்பேத்கர்
தொண்டர்கள், தனது பண்ணையில் பகல் முழுவதும் சில சமயங்களில் இரவிலும் வேலை
வாங்கும் சில கம்யுனிஸ்ட்கள் - காந்தியை, அம்பேத்கரை, மார்க்சைக் கூட
உண்மையற்றவர்களாய் காட்ட இரவிக்குமார் நாளைக்குக் கூற ஆரம்பித்து விடுவார்.
ஒரு தத்துவத்தை சரியா, தவறா என்றும் , ஒரு தலைவரை உண்மை யானவரா, போலியானவரா
என்றும் அறிவதற்கு புதுமையான அளவு கோலை உருவாக்கும் புத்தி சாலித்தனம்
இரவிக்குமாருக்கு மட்டுமே உம்ளது போலும் அதனால் தான் அவர் அறிஞர்
புகழப்படுகிறார் போலும்!
அதிகம் வேண்டாம்!
இரவிக்குமார் அவர்களே! உங்கள் கேள்விகளுக்கான விமர்சனங்களுக்கான பதில்கள்
எல்லாம் தொகுப்பாக ஒரே சமயத்தில் வேண்டுமெனில் உங்கள் பழைய நூல்களை கட்டுரைகளை
திரும்ப எடுத்துப் படியுங்கள்!
அல்லது வருமானத்துக்கு வழி வேண்டுமானால் எழுத்தில் வெளியிட முடியாத எளிய
வழிகள் ஏராளமாக உம்ளன! அல்லது எல்லோரும் பேசப்பட வேண்டுமானால் பிரேமானந்தா,
சோப்ராஜ், நாகராஜ் (தினத்தந்தி மொழியில் காமக்கொடூரன் நாகராஜ்) என்போர் வழி
நடக்கலாம்!
யாருக்காவது ஜால்ரா அடித்தே ஆக வேண்டுமானால் - இடையில் மூன்றே மாதங்கம் -
மார்கழி மாத பஜனைக் கோஷ்டியில் சேர்ந்து கொள்ளுங்கள்!
இரவிக்குமாரும் ஆர்.எஸ்.எஸ்சும், ஒரே குரலை ஒலிப்பதன் பின்னணி என்ன?
(16.9. 2004 `புரட்சி பெரியார் முழக்கம்' இதழில் `புதியவன்' எழுதிய கட்டுரை.)
|