Header
dravidar - periyar - home dravidar - periyar - articles dravidar - periyar - media dravidar - periyar - photo gallery   dravidar - periyar - links dravidar - periyar - contactus
dravidar - periyar - tamilnadu
dravidar - periyar - news dravidar - periyar - pdk dravidar - periyar - periyar mulakkam dravidar - periyar - marriage without caste dravidar - periyar - ebooks dravidar - periyar - audiovideo
 
leftside
 
 

1879 - 1918 | 1919 | 1920 | 19211922

1923

1924

1925

1926

1927

1928

1929

1930

1931

1932

1933

1934

1935

1936

1937

1938

1939

1940

1941

1942

1943

1944

1945

1946

1947

1948

1949

1950

1951

1952

1953

1954

1955

1956

1957

1958

1959

1960

1961

1962

1963

1964

1965

1966

1967

1968

1969

1970

1971

1972

1973

 
 

 

1879 முதல் 1918 முடிய
 

தந்தை பெயரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.9.1879இல் ஈரோட்டில் வேங்கடப்ப நாயக்கருக்கும், சின்னத்தாயம்மையார் எனும் முத்தம்மாளுக்கும், நான்காவது மகவாகவும், இரண்டாவது மகனாகவும் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஈ.வெ.கிருஷ்ணசாமி, பொன்னுத்தாயி அம்மாள், கண்ணம்மாள் ஆகியோர். ஈ.வெ.கிருஷ்ணசாமியின் முதல் மனைவி ரங்கநாயகிக்கு மிராண்டா, சம்பத், செல்வராஜ், செல்லா, கஜராஜ் ஆகியோரும் மக்களாவர். பொன்னுத்தாயி அம்மையாருக்கும் அவரது கணவர் கல்யாணசுந்தர நாயக்கருக்கும் (மாப்பிள்ளை நாயக்கர்) அம்மாயி, அப்பையா ஆகிய இருவர் மக்கள். கண்ணாமாளின் கணவர் பெயர் எஸ். ராமசாமி நாயக்கர் என்பதாகும். கண்ணமாளுக்கும் குழந்தை இல்லை. எஸ்.ராமசாமி நாயக்கரின் இரண்டாவது மனைவி பொன்னம்மாளுக்கு ராஜாத்தி என்கிற சுப்புலட்சுமி, காந்தி, சரோஜினி, சந்தானம், சாமி அகிய அய்ந்து மக்கள்.

பெரியார் தனது தந்தையாரின் சிறிய தாயாரான விதவையின் வீட்டில் சுவீகாரமாகச் சென்று சிறுவயது முதற்கொண்டு, கட்டப்பாடு அற்று, குறும்பு மிக்கவராக வளர்ந்தார். 6 வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். 9 வயதில் ஈரோடு முனிசிபல் ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பெற்று, இரண்டாண்டுகள் பயின்று 4ஆவது வகுப்பு தேறினார். இவர் தேறிய செய்தி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கெஜட்டில் வெளியிடப்பட்டது. 10ஆவது வயதில் பள்ளிப் படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார். 12ஆம் வயதில் தந்தையாரின் மண்டிக்கடை வாணிபத்தில் ஈடுபடுத்தப்பட்டார். 19ஆம் வயதில், 13 வயது நாகம்மையைத் திருமணம் புரிந்தார். இந்த நாகம்மையார், பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையாருக்கு ஒன்று விட்ட தம்பி, சேலம் தாதம்பட்டி ஹெட்கான்ஸ்டபிள் ரங்கநாயக்கருக்கும், அவர் மனைவி பொன்னுத்தாயி அம்மையாருக்கும் பிறந்த மூன்று மக்களுள் ஒருவர் ஆவார். தேவராஜன், முத்தம்மா ஆகியயோர் மீதி இருவர். பெரியாருக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு பெண் குழந்தை பிறந்து, அய்ந்து மாதத்திலேயே இறந்து விட்டது. பெரியார் இளமையிலேயே அசார அனுஷ்டானங்களுக்கு அப்பாற்பட்டவாராகவும், தம் வீட்டுக்கு வரும் புராணிகர்களைக் குறுக்குக் கேள்வி கேட்டுத் துளைக்கும், சிந்தனை வளம் மிக்க குறும்புக்காரராகவும், சாதிவேறுபாடற்ற சமத்தவ எண்ணங் கொண்டவராகவும், நேர்மை, நாணயம், வியாபாரத்தில் திறமை மிக்கவராகவும் விளங்கினார். 21ஆம் வயதில், தனது மண்டிக்கடையில் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு கொடுத்தார். தமது 23ஆம் வயதில்,சாதி, ஒழிப்பு எண்ணங்கொண்டு, அனைத்து சாதியினர் மதத்தினருடன் சமபந்தி போஜனம் நடத்தினார். அத்துடன் வேளாள வகுப்புப் பெண்ணுக்கும் நாயுடு வகுப்பு ஆணுக்கும் கலப்புத்திருமணம் நடத்தி வைத்தார். தனத 24ஆம் வயதில், தனத தந்தையைப் போல கையெழுத்துப் போட்டார் என்று இவர்மீது ஏற்பட்ட வழக்கில், தானே கையெழுத்து இட்டதாக நீதிமன்றத்தில் உண்மையை பேசி, விடுதலையடைந்து இதுவரை நேர்மையாக அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். 25ஆம் வயதில், தனத தந்தையார் மறுத்தும், அவருக்குத் தெரியாமல், செல்வக்குமார் முதலியார் என்பவரிடம் கடன் வாங்கி, ஈரோடு சிதம்பரம் பூங்காவுக்கு அருகே 30 ஏக்கர் நிலம் வாங்கி அதைத் தன் தந்தையார் பெயருக்கே சாசனம் எழுதினார். கடன் வாங்கியது “மனத்தக்கு இழுக்கு“ என்று தந்தையர் கண்டிக்கவே, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேளியேறினார். துறவி வேடம் பூண்டு, பெஜவாடா, காசி, கல்கத்தா, அஸ்ஸன்சூல், பூரி, எல்லூர் முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார். புரோகிதப் பார்ப்பனர்களின் கயமை, வைதீகத்தின் பொய்மை ஆகியவற்றை நேரில் கண்டார். பின்னர், எல்லூரிலிருந்த தந்தையாரால் அழைத்து வரப்பட்டார். மண்டிக்கடையை தன் பேரியேயே நடத்தினார். 28,29 ஆம் வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டங்கொண்டு மாநாடுகளுக்கு செல்லத் தொடங்கினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவியபோது, மீட்புப் பணியாற்றியதுடன், இறந்த சடலங்களை, உறவினர்களே கைவிட்டுச் சென்றபோதும், தன் தோளில் சுமந்து, அப்புறப்படுத்தி அரும்பணியாற்றினாார். 30ஆம் வயதில் தனது தங்கையின் மகளுக்கு உறவினர்களின் எதிர்ப்புக்கிடையில் விதவைத் திருமணம் செய்து வைத்தார். 32ஆம் வயதில் தந்தையாரை இழந்தார். பொதுவாழ்வில் மிகவும் நாட்டங்கொள்ளலானார்.

1919
 

காங்கிரஸ், சீர்திருத்தத்துக்குப் பாடுபடும் என்றும், வகுப்புரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், பதவி உத்தியோகங்களின் 50 சதவீதம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கி அளிக்கப்படும் எனவும் தேர்தலில் போட்டியிட்டு அரசியலைக் கைப்பற்றும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை எனவும் காங்கிரசார் உறுதி கூறியதை நம்பி, சமுதாய சேவைக்கு ஒரு வாய்ப்பு என்று கருதிக் காங்கிரசில் உறுப்பினரானார். ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவியை விட்டு விலகினார். அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குத் தமிழகப் பிரதிநிதியாகச் சென்று வந்தார். திருச்சியில் 25ஆவது ராஜீய மாகாணகாங்கிரஸ் கான்பரன்சில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

1920
 

தாம் பொது நிலையங்களில் வகித்து வந்த ஏறத்தாழ 29 பதவிகளையும், விட்டு விலகினார் காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார். ஆண்டுக்கு ரூபாய்.20,000 வருமானம் வரக்கூடி வாணிபத்தையும், தாம் நடத்தி வந்த பஞ்சாலையையும், நிறுத்திவிட்டார். திருநெல்வேலியில் நடைபெற்ற ராஜீய காங்கிரஸ் மாகாண மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மாநாட்டுத் தலைவர் திரு.எஸ். சீனுவாச அய்யங்கார், இது பொது நன்மைக்குக் கேடு ஆனதால் ஒழுங்கு தவறானது என்று கூறி, அனுமதி மறுத்தார்.

1921
 

ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தினார். காந்தியாரின் நிர்மாணத்திட்டத்தை ஏற்று ஆடம்பர ஆடையை விட்டக் கதர் உடுத்தினார். தாயார், மனைவி, தங்கை குடும்பத்தினர் அனைவரையும் கதர் உடுத்தச் செய்தார். கதர் மூட்டைகளைத் தம் தோளிலேயே சுமந்த சென்று ஊர் ஊராக விற்பனை செய்தார். திருச்செங்கோட்டில் கதர் ஆசிாரமத்தைத் திறந்து வைத்தார். மது தரும் மரங்களை வெட்ட வேண்டும் என்று காந்தியார் வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க, வடநாட்டில் பல ஈச்ச மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. தென்னாட்டில் இவர் ஒருவரே, சேலம் தாதம்பட்டியில் தமது தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தச் செய்தார். நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தனது குடும்பத்துக்கு வரவேண்டிய 50,000 ரூபாய்களை இழந்தார். இதில் ரூ.28,000 மதிப்புள்ள பத்திரம் ஒன்றினை தன் பேருக்கு மேடோவர் (Mede Over) செய்து தரும்படியும், தாம் இலவசமாக வாதாடி வசூல் செய்து தருவதாகவும், பிறகு தொகையை திலகர் சுயராஜ்ஜிய நிதியில் சேர்த்து விடலாம் என்று சேலம் திரு.சி.விஜயராகவாச்சாரியார் விடுத்த வேண்டுகோளைக் கொள்கை அடிப்படையில் புறக்கணித்தார். கள்ளுக்கடை மறியலில் கைதாகி 15.11.21இல் சிறைபிடிக்கப்பட்டு ஒரு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு, கையில் விலஙகிடப்பட்டு கோவைச் சிறைக்குத் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அன்னை நாகம்மையாரும் கண்ணம்மாளும் மற்றும் ஆயிரக்கணக்கானோரும், 144 தடையை மீறி மறியலில் ஈடுபட்டனர். எண்ணிக்கை பெருகவே, அரசு பணிந்துதடையை நீக்கியது. தஞ்சையில் நடைபெற்ற 27ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்வைத்தார். அவ்வமயம் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் இதனைக் கொள்கையாக வைத்துக் கொள்வோம் தீர்மான ரூபமாக வேண்டாம்’் என்று தந்திரமாகத் தடுத்தார்.

   

1922
 

கள்ளுக்கடை மறியல் வீறுடன் தொடர்ந்து. அரசாங்கத்திற்கும் காங்கிரசுக்கும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக ஒப்பந்தப் பேச்சு நடைபெற்றது. இது தொடர்பாக, பம்பாயில் ஒரு மாநாடு நடைபெற்றது. அம்மாநட்டு நடவடிக்கை தொடங்கப்படும் முன்பாக, திரு.மாளவியா, திரு.சங்கரன்நாயர் ஆகியோர், கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டு வேறு நடவடிக்கை தொடரலாம். என காந்தியாரைக் கேட்டுக் கொண்டபோது காந்தியார், கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது, என்று நாகம்மையாரையும் கண்ணம்மாவையும் குறிப்பிட்டார். (ஆதாரம்19.1.22 இந்து) இந்தியாவிலேயே முதன் முதல், தம் வீட்டுப்பெண்களை பொது வாழ்வில் ஈடுபடுத்தி, மறியலில் கலந்து கொள்ளச் செய்தவர் பெரியார் ஒருவரே! ஈரோட்டில், தன் தந்தையார் சமாதிக்குப் பக்கத்தில் உள்ள கட்டடத்தில் இந்திப் பிரசாரப் பள்ளியைத் துவக்கி, இந்திப் பயிற்றுவிக்க ஏற்பாடு சேய்தார். காங்கிரசு கிளர்ச்சியில், கோவை சிறையில் இருந்தபோது, உடனிருந்த நண்பர் திரு.தங்கப்பெருமாள்பிள்ளையுடன் கலந்துபேசி, சுயமரியாதை சமத்துவம், சகோதரத்துவத்தை நமது நாட்டு மக்களுக்கு உண்டாக்க “குடி அரசு“ என்ற பெயரில் ஓர் ஏட்டைத் துவக்க முடிவு செய்தார். திருப்பூரில் நடைபெற்ற 28ஆவது, தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில், வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் சினமுற்று ‘மனு தர்ம சாஸ்திரத்தையும், இராமயணத்தையும் கொளுத்த வேண்டும்! என்று முழுங்கினார். அகில இந்திய சட்டமறுப்பு கமிட்டி உறுப்பினர்களைான மோதிலால் நேரு, டாக்டர் அன்சாதி, டாக்டர் அஜ்மல்கான், சி.ராஜகோபாலாச்சாரியார், வித்தல்பாய் படேல், கஸ்தூரிரெங்க அய்யங்கார் ஆகியோர் ஈரோடுட்டில் பெரியார் இல்லத்தில் கூடி விவாதித்தனர்.

1923
 

தான் கருதிய வண்ணம் “குடி அரசு“ ஏட்டைத் துவக்க 19.1.1923இல் அரசாங்கத்தில் பதிவு செய்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக விளங்கிய பெரியார், சேலம் 29ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார். அதில் கலகம் ஆகும்போல் தெரியவே, திரு.ஜார்ஜ் ஜோசப்பும், திரு. வரதராஜூலு நாயுடுவும் தீர்மானத்தை நிறுத்தி விட்டார்கள். பின்னர், மதுரை, திருச்சி, ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடகளிலும் வகுப்புரிமையை வலியுறுத்தினார்.

1924
 

கேரள நாட்டில் ஈழவர், தீயர், புலையர் முதலானோருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க, வைக்கம் என்ற இடத்தில் உள்ள மகாதேவர் கோயில் முன்பாக போராட்டம் நடத்த 30.3.1924 அன்று அங்குள்ள காங்கிரசார் முடிவு செய்து, நடத்தி வந்த கிளர்ச்சி தொய்வுபடவே, அவர்களது அழைப்புக்கிணங்கி, பெரியார் வைக்கம் சென்று இழிவு ஒழிப்புப் போரில் ஈடுபட்டதுடன், தமது துணைவியார், தங்கையார் ஆகியோரையும் ஈடுபடச் செய்து, கிளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டினார். 224.1924இல் ஒரு மாத தண்டனை பெற்று “அருவிக்குத்தி“ எனும் தீவுச் சிறைக்குப் படகில் அழைத்துச் செல்லப்பட்டார். வழியில், பெரும் காற்றில் படகு அலைக்கழிக்கப்படவே, சட்டத்திற்குக் கட்டுப்படும் பெரியார், தாமே முன்னின்று பாதுகாப்பு தந்து, கரை சேர்த்து, தானே சிறைக்குள்சேர்ந்தார். விடுதலையானதும், மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டு “வைக்கத்தை“ விட்டு வெளியேறும்படி உத்திரவிடப்பட்டு, அதையும் மீறி கிளர்ச்சி செய்ததால் ஒரு வார காலத்தில் மீண்டும் சிறை பிடிக்ப்பட்டு திருவாங்கூர் மத்திய சிறையில் சுமார் 4 மாத காலம் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார்.

பிறகு விடுதலையடைந்து ஈரோட்டுக்கு வந்த அன்றே, ஏழு மாதங்களுக்கு முன்பு கதர்ப் பிரச்சாரம் செய்து வந்தபோது சென்னையில் பேசிய பேச்சினை சாக்காகக் கொண்டு, சென்னை அரசினரால் அரச வெறுப்பு, வகுப்பு வெறுப்புக் குற்றஞ்சாட்டி 11.9.24 இல் சிறைபிடிக்கப்பட்டு சென்னையில் சில நாள் காவலில் வைக்கப்பட்டார். இச்சிறைப் பிடிப்பு, பெரியார் மீண்டும் வைக்கம் சென்று மறியல் செய்து தொல்லை கொடுக்காமல் இருக்க, சர்.சி. ராமசாமி அய்யர் சட்ட மந்திரியாக இருந்த சென்னை அரசு, வாவய்யா என்ற பார்ப்பனர் திவானாக இருந்த திருவாங்கூர் அரசுக்குச் செய்த மறைமுக உதவி என்பது பின்னர் வெளியாயிற்று! தீண்டாமை எதிர்ப்புப் போர் வெற்றியடைந்தது. பெரியாரை ‘வைக்கம் விரர்’ என்று திரு.வி.க புகழலானார். இந்த வைக்கம் போருக்கு ஊக்கம் கொடுக்காததுடன், மறைமுகமாக இடைய{றும் விளைத்த சி.ராஜகோபாலாச்சாரியார், காந்தியார் ஆகியோர் பின்னாளில் காந்தியார் தலையீட்டாலேயே, வைக்கம்போர் வெற்றி பெற்றது என்று வெளியுலகுக்குக் காட்டியதோடு, சத்தியசோதனைப் புகழ் காந்தியார், ‘இந்தியாவில்’ தாம் எழுதிய வைக்கம் சத்தியாக்கிரகம் பற்றிு அடுக்கடுக்கான கட்டுரைகளில் ‘ஈ.வெ.ராமசாமி’ என்ற பெயர் எந்த ஒரு இடத்திலும் வராதவாறு எச்சரிக்கையாக இருட்டடிப்புச் செய்தார்.

வ.வே.சு அய்யர், காங்கிரசின் கொள்கையான தேசீயத்தைப் பரப்ப வேண்டி சேர்மாதேவி என்ற இடத்தில், ‘பாலபாரதி தமிழ்க் குருகுலம் பரத்துவாஜ ஆசிரமம்’ என்ற பெயரில் தேசீய வீரர்கள் பயிற்சிக் கூடமொன்றை, காங்கிரஸ் இயக்கத்தின் நிதியையும் தமிழ் மக்களின் நன்கொடையையும் கொண்டு நடத்தி வந்தார். இதில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், மற்றவர்களுக்கு பழைய சோறும், தனி இடத்தில் வெளியில் சாப்பாடம், இருவர்க்கும் தனித்தனி தண்ணீர் பானைகளில் குடிநீரும், பார்ப்பணர்க்கு தேவபாராயணமும், அல்லாதவர்க்கு தேவாரம், திருவாசகமும், இப்படியாக வேறுபாடு காட்டப்பட்டது. இக்குருகுலத்திலே பயின்ற ஒதுந்தூர் ராமசாமி ரெட்டியார் மகன் பார்ப்பன பிள்ளைகளுக்கு உள்ள தண்ணீர்ப் பானையில் தண்ணீர் குடித்ததற்காகத் தண்டிக்கப்பட்டான். இது பெரியார் கவனத்துக்கு வந்து, வெகுண்டெழுந்து, அதற்கு காங்கிரஸ் நிதி உதிவியை மேற்கொண்டு வழங்க மறுத்ததோடு, மக்கள் மத்தியில் தேசியத்தின் பேரால் பார்ப்பனர் செய்யும் அட்டூழியத்துடன், குருகுலத்தை விரைவில் தானே ஒழியும் நிலைக்கு ஆளாக்கினார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற 30ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தானே தலைவராக இருந்து வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார். திரு.எஸ். சீனுவாச அய்யங்கார் சென்னையிலிருந்து ஏராளமான ஆட்களைக் கூட்டிவந்துத் தடுத்து, தீர்மானம் தோல்வியுறச் செய்தார். நீதிக்கட்சியின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைப் பெரியார் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

1925
 

திருப்பாதிரிப்புலிய{ர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் எனும் ஞானியார் சுவாமிகளைக் கொண்டு 2.5.1925 தேதிகளில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற 31ஆவது ராஜீய காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொணர்ந்தார் திரு.வி.க. பார்ப்பனர் சூழ்ச்சிக்கு பயந்து, ‘பொது நன்மைக்காக இத்தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது’ என்று கூறி அனுமதி மறுத்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக இருந்த பெரியார்,் ‘இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை’ என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, தம் ஆதரவாளர்களுடன் வெளியேறினார். அவர் வெளியேறிய நாளைச் சுயமரியாதை இயக்கத் துவக்க நாளாகக் கொள்ளலாம்

1926
 

பெரியார் நடத்திய வைக்கம் போராட்ட எதிரொலியாக 4.2.1926 இல் தீண்டப்படாதார் கோயில் நுழைவுச் சுசீந்திரத்தில் நடைபெற்றது. பெரியார்ஆதரவுக் குரல் கொடுத்தார். ‘தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்’ என்ற கட்டுடைரயை 7.3.26 ‘குடி அரசு’ இதழில் எழுதி இந்தியாவிலேயே முதன் முதலாக இந்தி புகுத்தப்படுவதால் ஏற்படும் கேட்டினை முன்கூட்டியே எச்சரித்தார். இவ்வாண்டு சென்னை சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், ஒதுங்கி இருந்து, பார்ப்பனரல்லாதார் நன்மைக்குப் பாடுபடுவோர் வரட்டும் என்று விரும்பி இருந்தார். பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியைத் தூண்டி, பார்ப்பனரின் சுயநல புத்தியையும், அடுத்துக்கெடுக்கும் துரோகத்தையும் நாடெங்கும் பிரச்சாரம் செய்தார். மதுரையில் 25,26,12.1926 தேதிகளில், பார்ப்பனர் அல்லாதார் முதல் மாநாட்டைக் கூட்டினார். இம்மாநாட்டின் தலைவர் சர்.ஏ.பி.பாத்ரோ ஆவார். வ.உ.சி., ஜார்ஜ் ஜோசப் போன்ற முக்கியஸ்தர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நாடெங்கும் பார்ப்பனர் அல்லாதார் மாநாடுகள் நடைபெற்றன.

1927
 

பெங்களூரில் காந்தியாரைச் சந்தித்து, சாதிக்குக் காரணமான இந்துமத ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு ஆகியவற்றை வற்புறுத்தினார். காந்தியார் ஏற்கவில்லை. இதற்குப் பின் காந்தியாரிடம் கொண்டிருந்த நம்பிக்கையை விடலானார். இந்தியாவுக்கு அரசியல் உரிமை வாங்குவது குறித்து ஆராய வருகை தந்த ‘சைமன் கமிஷனை’ யாவரும் எதிர்த்த நிலையில் முதன் முதல் வரவேற்றவர் பெரியாரே! செப்பம்பரில் துவக்கப்பட்ட ‘திராவிடன்’ தினசரியின் ஆசிரியராகச் சிலகாலம் இருந்தார். திருக்குறள், புத்தர் கொள்கைகளைப் பரப்பலானார். தமது பெயருக்குபின் இருந்த ‘நாயக்கர்’ என்ற சாதிப்பட்டத்தைத் துறந்தார்.

1928
 

டாக்டர் சுப்பராயன் தலைமையிலான சுயேச்சை மந்திரிசபை, நீதிக்கட்சியின் துணையுடன் அமைந்தது. இவ்வரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்டது குறித்து பெரியார் மகிழ்ந்தார். இதற்கு மூலகாரணமான அமைச்சர் திரு.எஸ்.முத்தையா முதலியாரைப் புகழந்தார். 1928 ஜூலை 19ஆம் தேதி முதல் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தடையை மீறிப் பேசியதற்காக 5.8.28 இல், ஈரோட்டில் சிறைபிடிக்கப்பட்டு, சிறிது காலம் சிறையில் இருந்தார். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 7.11.28இல் ரிவோல்ட் ஆங்கில ஏட்டைத் துவக்கினார். நீதிக்கட்சியில் மனமுடைந்த பார்ப்பனர் அல்லாதாரைத் தேற்றினார். ‘கர்ப்பத்தடை’ பற்றி முதன் முதலில் பெரியார் பேசினார்.

1929
 

சுயமரியாதை இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செங்கற்பட்டு, முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினை 17,18,2.29 தேதிகளில் நடத்தினார். டபிள்ய{.பி.ஏ. சவுந்திர பாண்டியன் இம்மாநாட்டுக்குத் தலைமமை ஏற்றார். வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், புரட்சிகரமானதுமான 34 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நறைவேறின. 1909 இல் மிண்டோ மார்லி சீர்திருத்தமும், 1919 இல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமும் கொண்டு வந்த பிரிட்டிஷ் அரசு, 1927 இல் இந்தியாவுக்கு மேலும் என்னென்ன உரிமைகள் வழங்கலாம் என்பதை நேரில் ஆராய்ந்து வருமாறு ‘சர்ஜான்சைமன்’ என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து. இந்தக் குழு இந்தியாவிற்கு 1928-29இல் வந்தபோது, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், தந்தை பெரியார் மற்றும் பார்ப்பனரல்லாத தலைவர்கள் கூடிய இந்த மாநாட்டில் ‘சைமன் குழு’ பார்ப்பனரல்லாத மக்களுக்கு நன்மை தரும் என்று முடிவு செய்து தீர்மானம் இயற்றினார். பெரியார் மலாயா சுற்றுப்பயணத்திற்காக 15.12.29இல் நாகையில் கப்பலேறினார். அவருடன் நாகம்மையார், எஸ்.ராமனாதன், அ.பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், சி.நடராசன் ஆகியோர் சென்றனர்.20.12.29 அன்று பினாங்கு துறைமுகத்தில் பெரியார் அவர்கள் இறங்கியபோது 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இவரை வரவேற்றனர். தொடர்ந்து பயணம் செய்தார். 23.12.29இல் ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டைத் திறந்து வைத்த உரையாற்றினார். 26.12.29இல் சிங்கப்பூரில் நடைபெற்ற மலாயா இந்திய சங்க மாநாட்டில் விரிவுரை ஆற்றினார்.

1930
 

மலாயாவில் தொடர்ந்த பயணம் மேற்கொண்டார். சென்ற ஆண்டு இறுதியிலிருந்து 11.1.30 முடிய 23 நாட்கள் பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரம் செய்த இடங்கள் வருமாறு, பினாங்கு, கோலாலம்பூர், கைப்பீஸ், மூவார் ஜோகூர்பார், பந்துபகார், மலாக்கா, தம்பின், கோலப்பிறை, கோலாகுபு, தஞ்சமாலிம், சுங்கை குரூட், தெலங்கன் சா கம்மார், கோலாகஞ்சார், சுங்கப்பட்டாணி முதலிய சுமார் 71 இடங்களில், சுமார் 39 சொற்பொழிவுகளும், 34 வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றி அங்கு அறிவொளி பரப்பினார். 2.1.30இல் சிலாங்கூர் என்ற இடத்தில் மாநில மருத்துவச் சங்கத்தை தங்கத்தால் செய்த சாவியால் திறந்து வைத்தார். 11.1.30இல் பினாங்கில் கப்பலேறிய பெரியார் 16.1.30இல் நாகை வந்தடைந்தார். பிரயாண காலம் உட்பட மொத்தம் 32 நாட்கள் அவர் பயணம் மேற்கொண்டார். மலாயாவிலிருந்து திரும்பும்போது கப்பலில் முதன் முதல் தாடி வளர்க்க ஆரம்பித்தார்.

சிருங்கேரி சங்கராச்சாரியார், பெரியாரை தமது இடத்துக்கு வரும்படி அழைத்து, பெரியார் தொண்டைப் புகழ்ந்தும் கடிதம் எழுதினார். ஈரோட்டில் எம்.ஆர்.ஜெயகர் தலைமையில் 2ஆவது மாகாண சுயமரியாதை மாநாட்டை நடத்தினார். ரிவோல்ட் வார இதழ் 55 இதழ்கள் வந்த நிலையில் நிறுத்தப்பட்டது. நாடெங்கும் உண்மை நாடுவோர் சங்கம் தாராள சிந்தனையாளர் கழகம்,பகுத்தறிவாளர் கழகம் துவக்கினார். ‘கர்ப்ப ஆட்சி’ என்ற நூலை வெளியிட்டார். காந்தியாரால் தொடங்கப்பட்ட உப்புப்போரை கடுமையாகக் கண்டித்தார். நன்னிலம் சுயமரியாதை மாநாட்டில் இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார். மே மாதம் சேலத்தில் நடைபெற்ற வன்னியர் மாநாட்டில் முதன் முதலாக ‘இந்தியா ஒரு நாடா’ ? என்று வினா தொடுத்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சென்னை சட்டமன்றத்தில் கொண்ட தேவதாசி ஒழிப்பு மசோதாவை தீவிரமாக ஆதரித்து, அம்மசோதா நிறைவேற காரணமானார்.

1931
 

விருதுநகரில் தமிழ் மாகாண 3ஆவது சுயமரியாதை மாநாட்டை திரு.ஆர்.கே. சண்முகம் தலைமையில் நடத்தினார். கதர் திட்டத்தின் பொருந்தாத் தன்மையை விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.

மேல் நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூக நிலையை நேரில் கண்டறியவும், சமதர்மக் கொள்கைகள், ரஷ்யாவில் ஆட்சி மூலம் செயல்படுத்தப்படுவதைக் காணவும், வாய்ப்பு நேரிடின், ரஷ்யாவிலேயே தங்கிவிடவும் எண்ணங்கொண்டு, உடல் நலிவுற்ற நிலையில், மருத்துவர் அறிவுரையைப் புறக்கணித்து, தனது அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். உடன் சென்றோர் எஸ். ராமனாதன், ஈரோடு ராமு ஆகியோர்.

13.12.31இல் ‘அம்போசா’ (AMBOISE) என்ற பிரஞ்சுக் கப்பலில் சென்னைத் துறை முகத்திலிருந்து, செல்வ வசதியிருந்தும், உணவுக்கும் உடைக்கும் கதியற்ற ஏழை மக்கள் செல்லும் 4ஆவது டெக்கில், புழுதி நிறைந்த இடத்தில் பாமர மக்களுடன் சென்ற எளிமைப்பாங்கு பலரைக் கண்கலங்கச் செய்தது. கப்பல் 13.12.31 இரவு புதுவைத் துறைமுகம் வந்து சேர்Ī